|

பஞ்சாங்க சதஸ் : 2013 | 2012 | 2011 | 2010 | திருப்பதி பஞ்சாங்க சதஸ் | நினைவாஞ்சலி |
மன்மத வருஷ பஞ்சாங்க சதஸ் புகைப்பட தொகுப்பு
Manmatha Varusha Panchanga
Sadas Photo Gallery
எதிர் வரும் ஸ்ரீமன்மத (2015- 2016) வருஷத்திற்கான பஞ்சாங்க சதஸ் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் ஏற்பாட்டின்படி, ஜய வருடம், ஆடி மாதம் 19 திங்கள் முதல் 21 புதன் கிழமை (4.8.2014 - 6.8.2014) வரை மூன்று நாட்கள் நடைப்பெற்றது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாஸ்ரீ. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,
மஹா ஸ்ரீ விஜயேந்திர சரவஸ்வதி ஸ்வாமி அவர்கள் அருளாசி வழங்கி பஞ்சாங்க சதஸை துவக்கி வைத்தார்கள்.
மூத்த வேத தர்ம சாஸ்திர விற்பன்னர்களும், சூரிய சித்தாந்தம், திருக்கணிதம் மற்றும் வாக்கியம் முறை பஞ்சாங்க கணிதக்ஞர்களும், பஞ்சாங்க வெளியீட்டாளர்களும் கலந்துக்கொண்டார்கள்.
தர்ம சாஸ்திர விற்பன்னர்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெறும் சிரார்த்திதி, விரதாதிகள், உபாகர்மா, பண்டிகை நிர்னயம் தொடர்பான சந்தேகங்களுக்கு சாஸ்திர ரீதியான தீர்வுகளை கூறி விளக்கம் அளித்தனர், அவர்களின் ஆலோசனை அடிப்படையில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இவ்வாண்டு தமிழகத்தின் பழமையான பஞ்சாங்கமான மருத்துவக்குடி பஞ்சாங்க கணிதர் ஸ்ரீG.S. சுப்ரமண்ய ஜோதிஷர் உட்பட ஏனைய தமிழக பஞ்சாங்க கணிதக்ஞர்கள் கூடுதலாக ஆந்திர மாநில தெலுகு திருக்கணித பஞ்சாங்க கணிதக்ஞர் ஸ்ரீசித்தாந்தி, தமிழகத்தில் புதியதாக வெளிவரும் மாரியம்மன் பஞ்சாங்கம், ஜாம்பவான் பஞ்சாங்க கணிதக்ஞர்களும் சதஸ்ஸில் கலந்துக்கொண்டார்கள்
மேலும் இலங்கை யாழ்பாணம் - மட்டுவில் நகரத்தில் இருந்து 126 ஆண்டுகளாக வெளிவரும் மிகப்பழமையான திருக்கணித பஞ்சாங்கத்தை கணிக்கும் சிவஸ்ரீ .சி. சிதம்பரநாத குருக்கள் அவர்கள் இந்தாண்டும் கலந்துக்கொண்டது சிறப்பான விஷயம்.
சதஸ் முடிவில் வேதவிற்பன்னர்கள் மற்றும் பஞ்சாங்க கணிதக்ஞர்களை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாஸ்ரீ. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மஹா ஸ்ரீ விஜயேந்திர சரவஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் அருளாசி வழங்கி கௌரவித்தனர்.
ஸ்ரீசங்கரமட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரிவாகவும் மிகச்சிறப்பாகவும் செய்திருந்தனர்.
|
மன்மத வருட தமிழ் பஞ்சாங்கம் Manmatha Varusha Tamil Panchangam

புகைப்படங்கள்2010 பஞ்சாங்க சதஸ் அன்று எடுக்கப்பட்டது
(புகைப்படத்தை பெரியதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)
நன்றி: காஞ்சி ஸ்ரீ சங்கர மடம
பஞ்சாங்க சதஸ் 2010, 2011, 2012, 2013, 2014, 2015
Panchaga Sadas 2010, 2011, 2012, 2013, 2014, 2015
Photos: thanks to sri shankara mutt, Kanchi
Keywords: Nandana Varusha Panchangam, Kara Varusha Panchangam, Vijaya Varusha Panchangam, Jaya Varusha Panchangam, Vakyam, Thirukanitham, Thanigai Panchangam, Maruthuvakudi, Pambu, Sanakara mutt, Barath Ganitha, Arcot Seetharamaiyar, Siva Sakthi, Srinivasan, Sri Rangam, Vasan, Pudukottai, Panchangam, Sri Thanigai Panchangam, Sabari, Panchangam Software, Tamil Astrology Soft, New Panchangam, Next Year Tamil Vakya Panchangam, Muhurtha Dinam, Jaya Varusha Panchangam Free Tamil Panchangam, தமிழ் பஞ்சாங்கம், தணிகை பஞ்சாங்கம் |
|