எதிர் வரும் நந்தன (2012- 2013)வருஷத்திற்கான பஞ்சாங்க சதஸ் காஞ்சி
ஸ்ரீ சங்கர மடத்தின் ஏற்பாட்டின்படி கர வருடம், ஆடி மாதம் 20, 21, 22 (ஆங்கிலம் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5, 6, மற்றும் 7) தினங்களில் நடைப்பெற்றது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிமஹாஸ்ரீ. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மஹா ஸ்ரீ விஜயேந்திர சரவஸ்வதி ஸ்வாமிகள்அவர்கள் அருளாசி வழங்கி துவக்கி வைத்தாரகள்.
மூத்த வேத சாஸ்திர விற்பன்னர்களும், வாக்கிய மற்றும் திருக்கணித முறை பஞ்சாங்க கனிதக்ஞர்களும், பஞ்சாங்க வெளியீட்டார்களும் கலந்துக்கொண்டார்கள்.
மூத்த வேத விற்பன்னர்கள் பஞ்சாங்கம், விரதாதிகள், உபாகர்மா, சிவராத்திரி தின நிர்னயம் தொடர்பான சந்தேகங்களுக்கு சாஸ்திரரீதியான தீர்வுகளை கூறி விளக்கம் அளித்தனர், அவர்களின் ஆலோசனை அடிப்படையில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சங்கரமட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரிவாகவும் மிகச்சிறப்பாகவும் செய்திருந்தனர்.