மஹாமகம் 9.3.2028-கும்பகோணம் - புனித நீராடல் |
மாசி மகம் 2017 இந்த பிலவங்க ஆண்டு மாசி மாதத்தில் மகம் நட்சத்திர காலமும் பௌர்ணமி காலமும் சந்திக்கவில்லை. (மகம் நிலவை சந்திப்பது வேறு முழுநிலவும் மகம் சந்திப்பும் வேறு) மகம் நட்சத்திர பிரதானம்: திதி பிரதானம்: இந்தநாளுடன் ஒருவருட "மகாமகம்" கொண்டாட்டங்கள் முடிவுக்கு வரும்.
மகாமகம் - மாசிமகம் - கும்பகோணம் - 2028
அருள்மிகு. ஆதிகும்பேஸ்வரர் நீராடல் நேரம்: 13.2.2016 அன்று கொடியேற்றத்துடன் மாசிமகம் உற்சவம் துவங்கும் 10ம் நாள் மகம் நட்சத்திரத்தில் தீர்த்தவாரி(புனித நீராடல்) நடைபெறும். ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில் தொலைபேசி எண் 91-435- 242 0276. சிறப்பு விதி: கும்பகோண புவிநிலைப்படி மகம் நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் இருக்கும் பகல் 11:18 மகாமகம் வானியல் விளக்கம் சூரியன், பூமி, சந்திரன், குரு கிரகம், மகம் நட்சத்திரம் ஆகிய ஐந்து வானியல் பொருட்கள் நேர்கோட்டில் (±7 பாகை ) வரும் காலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டும் இதுபோல் வரும். இந்த காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குரு கிரகம் முழுநிலவுபோல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை பைனாகுலர் மூலம் காணலாம்.
வானில் வியாழன்கோள், நிலவு, மகம் நட்சத்திரம்கிழக்கு திசையில் இருந்து உச்சிவானம் நோக்கிய நிலையில் இரவு 11:30 மணி அளவில் வானில் தோன்றும் காட்சி. அன்று வியாழன்(குரு) கோளும் அதன் துணைக்கோள்கள்(நிலவு-சந்திரன்கள்) பைனாக்குலரில் தோன்றும் காட்சி.
|
|||||
தானம்: மகாமகம் அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதும் மிகவும் புன்னியமாகும். குறிப்பாக வேதம் படிக்கும் வேதபாட சாலை மாணவர்களுக்கு அன்னதானம் செய்தல் மிகவும் நற்பலனை தரும். அன்று "ஆகாமாவை" என்பதால் சூரிய உதயத்தில் நதி, குளம், ஆறு, கடல் நீராடல் மிகவும் நன்று. கூடுதலாக நன்பகலில் மகாமகம் வழிபாட்டிற்காக மீண்டும் நீராடல் அவசியமாகும். மேலும் அன்று கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளித்தில் நீராடல் நன்று |
|||||
சுமார் 20 இலட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிக அதிக கூட்டம் கூடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் அன்று தவிற்த்து அம்மாதத்தில் ஏதேனும் ஒருநாளில் கும்பகோணம் செல்லுதல் நன்று. மேலும் கும்பகோணம் அதனை சுற்றியுள்ள மற்ற திருத்தலங்களிலும் அன்று புனிதநீராடலாம். பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3கி.மீ தூரம் நடந்துதான் மகாமகம் குளத்தை அடையமுடியும். தற்காலிகமாக 9 பேருந்து நிலையங்கள் நகரை சுற்றி ஏற்படுத்தப்படும். மிகவிரிவான ஏற்பாடுகளை அரசுநிர்வாகம், காவல் துறை செய்யும், வருபவர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டுவரவேண்டாம். தேவைப்படும் மருந்து மாத்திரைகளை உடன் கொண்டுவரவும். குளிர்காலம் என்பதால் ஆஸ்மா நோயாளிகள் முன்னெச்சரிக்கையுடன் வரவேண்டும். அனைவரும் தங்கும் வகையில் நகரம் இல்லை எனவே தங்கும் சூழலில் போர்வை, விரிப்பு கொண்டுவரவும். கும்பகோணம் நகர வரைபடம் https://www.google.co.in/maps/@10.9551087,79.3850275,17z கும்பகோணம் சுற்றியுள்ள நவக்கிரக திருக்கோவில்கள் வழித்தடம் |
|||||
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் KUMBAKONAM EAST அவசரகால சிடிசென் பேண்டு & அமெச்சூர்(ஹாம் ரேடியா )அலைவரிசை |
|||||
பாலு சரவண சர்மா www.prohithar.com |