|
|
ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமி 2013
விரிவான விளக்கம்
|
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விளக்கம் PDF வடிவில், படம் JPEG வடிவில்
இந்த ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமி சூத்திரங்கள் அடிப்படையில் முறையே
புதன் கிழமை 12 ஆவணி, 28.8.2013
புதன் கிழமை 12 ஆவணி, 28.8.2013
புதன் கிழமை 12 ஆவணி, 28.8.2013
வியாழன் கிழமை 13 ஆவணி, 29.8.2013 |
ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி
ஸ்ரீஜயந்தி
முனித்ரய ஸ்ரீஜயந்தி(வைகானாஸம்)
ஸ்ரீஜயந்தி(பாஞ்சாரத்திரம்) |
இவ்வாண்டு ஆவணி 12ம் நாள்(28.8.2013) புதன் கிழமை அன்று கிருஷ்ண ஜயந்தி பூர்ணமாக வருகிறது. ஃ யாதெனில் அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் என அனைத்து அம்ஸங்களுடன் சேர்ந்து வருவது மிகவும் சரியான ஸ்ரீஜயந்தி நாளாகும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக ஏற்படும். இதுவே கிருஷ்ணர் பிறப்பின் காலசூழலுடன் ஒத்துப்போகும் நிலையாகும். இந்நாள் பூர்ண கிருஷ்ண ஸ்ரீஜயந்தி , கோகுலாஷ்டமி, வைகானஸ ஜயந்தி என அழைக்கப்படும்
பாஞ்சாரத்திர ஸ்ரீஜயந்தி: கிருத்திகை வேதை இருப்பதால் பாஞ்சாரத்திர முறையில் மறுநாள் 29.8.2013 வியாழன் அன்று ஸ்ரீஜயந்தி.
குறிப்பு: இந்த விசேஷ சூழல் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா துவங்கி, மேற்கு ஆசியாவில் கிருஷ்ணரின் காலடி மண்பட்ட காந்தாரம்(கந்தகார்-ஆப்கானிஸ்தான்) வரை மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. (சந்திர தரிசனம் மட்டும் சில இடங்களில் மாறுபாடும்)
கிருஷ்ண ஜயந்தி 2012
ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு:
ஸூரியன் சிம்மராசியில் இருக்க(ஆவணி மாதத்தில்), சந்திரன் அடிப்படையிலான 6 வது மாதமான பாத்ரபத மாதத்தில், தேய் பிறை அஷ்டமி திதியில், அஷ்டமி திதியின் பின்பாதி பகுதியான கௌலவ கரணத்தில், நள்ளிரவில், ரோகினி நட்சத்திரத்தின் 4ம்பாகத்தில், சந்திரன் உதயத்தில், ரிஷப லக்னத்தில், ஹர்ஷண யோகத்தில், புதன் கிழமையில் வஸூதேவனால் தேவகீதாயாருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உலகை ஜனங்களை ரட்சிக்க பிறந்தார் |
கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி சூத்திரம்
- கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம் வேறு ஸ்ரீ ஜெயந்தி வேறு
- கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம் சந்திரமாதமான சிராவண பகுள அஷ்டமி திதியே பிரதானம்
- அஷ்டமி நள்ளிரவில் வியாபித்திருப்பது மிக முக்கியம்
- இந்த கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம ஆடி (கடகம்) அல்லது ஆவணி(சிம்மம்) மாதத்தில் வரும்
- ஆவணியில் வரும் பொழுது ஸ்ரீ ஜெயந்தியுடன் சேர்ந்து அல்லது முன்னாள் அல்லது பின்னாளில் வரும்
ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம்
- அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், ரிஷப லக்னம் சேர்க்கை மிக முக்கியம்
- சந்திர மாதமான சிராவண மாதத்தில் அல்லது பாத்ரபத மாதத்தில் வரும்
- சிராவண மாதத்திற்கு அதிக முக்கியத்துவம் ஆயினும் சிராவண மாதத்தில் அஷ்டமி ரோகினி சேர்க்கை இல்லை எனில் பாத்ரபத மாத்தில் செய்யலாம்
- சூரியன் நிற்கும் சிம்ம மாஸம் தவிர கடகம்(ஆடி), கன்னி(புரட்டாசி) மாதங்களில் செய்யக்கூடாது.
- சிராவண மாதத்தில் அல்லது பாத்ரபத மாதத்தில் அஷ்டமி, ரோகினி சேர்க்கை இல்லை என்றால் அந்த வருடம் ஸ்ரீ ஜெயந்தி இல்லை !
வைகானஸ ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம்
- ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம் இதற்கு பொருந்தும் ஆயினும்
- ரோகினிக்கு கார்திகை தொடர்பு, அஷ்டமிக்கு சப்தமியின் தொடர்பு இருக்கக்கூடாது.
பாஞ்சாரத்திர ஸ்ரீ ஜெயந்தி சூத்திரம்
- ரோகினிக்கு கார்திகை தொடர்பு, அஷ்டமிக்கு சப்தமியின் தொடர்பு இல்லையெனில் மிகவும் விசேஷம்
- அஷ்டமி முடிவு காலமும், ரோகினி முடிவு காலமும் உதயத்தில் இரண்டு நாழிகை இருப்பின் அன்று தான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (ஸ்ரீ வைஷ்ணவ ஜெயந்தி) ஆகும்
|
|
Home
தணிகை திருக்கணித பஞ்சாங்கம், தணிகை ஜோதிட நிலையம், தாம்பரம்
புரோகிதர், Progithar, Balu Saravanan, Tambaram, Chennai, Astrologer,Sri Krishna Jayanthi Sri Jenmashtami, 2012, 2013, 2014, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி , ஜென்மாஷ்டமி, www.prohithar.com
progithar, Prohithar, Chennai Astrologer, Tambaram, Vakya Panchangam, Nandana Panchangam, www.prohithar.com, www.prohithar.in, subanal, Subadinam, Muhurtham Dates, Wedding Priest, புரோகிதர், வாக்கிய பஞ்சாங்கம், ஜோதிடர், தாம்ரபரம், சென்னை ஜோதிடர், பாம்பு பஞ்சாங்கம், தணிகை பஞ்சாங்கம், பாலு சரவண சர்மா, விஜய வருட பஞ்சாங்கம், வாசன் பஞ்சாங்கம், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் பஞ்சாங்கம், திருக்கோவில் அனுஷ்டான பஞ்சாங்கம், திருநெல்வேலி பஞ்சாங்கம், விஜய வருட முகூர்த்த நாட்கள், ஜெய வருட முகூர்த்த நாட்கள்
, Tamil baby names, தமிழ்குழந்தைகள் பெயர் |
|