ராகு - கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய புற்றுகளில் பால் ஊற்றுவது வழிபாடாகும், ஆயினும் நகரத்தில் உள்ள இறைச்சல், தொந்திரவு காரணமாக புற்றினுள் பாம்பு வாழ்வது என்பது இயலாத ஒன்று
பாம்பில்லாத புற்றுகளில் பால் ஊற்றுவதை விட மிருககாட்சி சாலையில் உள்ள ஒரு பாம்பின் பராமரிப்பு செலவினை ஏற்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடிய நேரடியான வழிபாடாகும்
இதனால் பாம்பும் பயன்பெறும், நமது நோக்கமும் நிறைவேறும்.
இதுபோன்று மற்ற கிரக தோஷ பரிகாரங்களுக்கும் முறையே
சூரியனுக்கு - மயில், குதிரை,
சந்திரனுக்கு - மான், நரி
செவ்வாய்க்கு - மயில், வாத்து
புதனுக்கு - மீன், சிங்கம், ஆமை, பன்றி,
குருவிற்கு - யானை
சுக்கிரனுக்கு - கருடன், பருந்து, ராஜாளி
சனிக்கு - காட்டெருமை, பறவைகள்
மிருககாட்சி சாலையில் உள்ள உயிர்களை பராமரிக்கலாம்
அரசும் இந்த பராமரிப்பு செலவிற்கு வரிவிலக்கு தருவதால் மிருககாட்சி சாலையை நன்கு நடத்தலாம்
அண்ணா உயிரியல் பூங்காவில் இது போன்ற ஏற்பாடு உள்ளது
அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூர், சென்னை 48
தொலைபேசி 2275 1089