ஒவ்வொரு அமவாசையும் மறைந்த மூதாதையர்களுக்கு சிறப்பான நாள்.இத்தகைய நாளில் அவர்களை நினைவு கூறுதல் மிகவும் அவசியமானது. இந்த நாளில் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய தர்ப்ப்ணம், ஆத்ம சாந்தி, தானம் என மூன்று வழிகளில் வழிபடலாம்.
தர்ப்பணம்
சிவன்/ பெருமாள் கோயில் குளக்கரை, ஆற்றங்கரை, அல்லது கடற்கரையில் தர்ப்பணம் செய்வது மிகவும் புன்னியமானது
ஆகமவிதிகளுக்கு மாறாக கோயில் உட்புறம் தர்ப்பணம் செய்தல் பலன்தராது (இந்தவிதி வெளிநாடுகளுக்கு பொருந்தாது)
ஆத்மசாந்தி பூஜை
தென்தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் தர்ப்பணம், தெவசம் செய்ய இயலாத இக்கட்டான சூழ்நிலையில் சிவன்/பெருமாளுக்கு இறந்தவர் ஆத்மா சாந்திஅடைய வேண்டி செய்யப்படும் பூஜையாகும் மிக எளிமையான ஒரு வழிபாடு
தானம்
தர்ப்பணம், ஆத்மசாந்தி வழிபாடு செய்தாலும் அன்றைய தினம் தானம் செய்தல் தான் புன்னியம் கிடைக்கும் மூதாதையரின் பாவ பிராயச்சித்த மாக தானம் செய்தல் மிகநன்று.
பசுவிற்கு 2 கிலோ தவிடு, உறுவிய அகத்திகீரை, வெல்லம் ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும்
ஏழைகளுக்கு, அனாதை இல்லங்களுக்கு, பொருளுதவி, ஏழை மாணவருக்கு கல்வி உதவி போன்ற தானம் செய்தல் நன்று.
குறிப்பு
பிராமணருக்கு தரும் தட்சனை என்பது அவரின் சேவைக்கான சம்பளம், அது தானம், தர்மம் என கொள்ளகூடாது