Home
கத்திரி – அக்னி நட்சத்திரம் 2013 -2020 (Agni Nakshtra – Kathiri)
திருக்கணிதம், சித்திரை பட்ச அயனாம்ச முறையில் அக்னி நட்சத்திர காலம்
அக்னி நட்சத்திர துவக்கம்(20°00'):
கத்திரி துவக்கம்(26°40') :
கத்திரி முடிவு(40°00'):
அக்னி நட்சத்திர முடிவு(43°20'):
|
தென்புலம் மற்றும் தென் துருவத்தில் உள்ள நாடுகளுக்கு இந்த அக்னிநட்சத்திர காலம் பொருந்தாது. அப்பகுதிகளுக்கு இந்த டெக்ளினேஷனுக்கு எதிர்மறையான காலமே அக்னி நட்சத்திர காலமாகும் |
தோற்றப்பொலிவு புவி மையக்கோட்பாட்டின்அடிப்படையில் நிராயண சூரியன் பரணி நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் (Sun Sidereal longitude 20°00’)பிரவேசிக்கும் காலம் முதல் ரோகினி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் (Sun Sidereal longitude 43°20’) பிரவேசிக்கும் காலம் வரை கத்திரி நாட்களாகும்.
Sun Sidereal longitude from 20°00’ to Sidereal longitude 13 °20’ (43°20’) days are called Agni Nakshtra – Kathiri. This year falls on 4th May 2012 and ends on 29th May 2012.
இதில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயனிக்கும் 15 நாட்கள் அதாவது சித்திரை மாதத்தின் கடைசி வாரமும், வைகாசி மாதத்தின் முதல் வாரமும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று பாரதீய வானியலாளர்கள் கணித்து அதற்கு கத்தரி (அக்னி நட்சத்திர உச்ச நாட்கள்) என்று அழைத்தார்கள்.
கத்திரி காலத்தில் வரும் அக்னி நட்சத்திர உச்சகாலம் என்று அழைக்கப்படும் 8 மே முதல் 21 மே வரை மிக வெப்பகாலம் ஆகும். கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.
கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை:
திருமணம், நிச்சியம், பெண்-மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள் (சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்தவையாகும்
கத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை:
மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட துவக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது(பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது
அறிவியல் பார்வை:
பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபுலம் (Northern Hemispheres)6 மாதங்களும் அடுத்து தென்புலம்(Southern Hemispheres)6 மாதங்களும் சூரியனின்ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின்ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின்முக்கிய காரணியாகும்
The seasons are caused by a combination of things. The Earth is tilted (23.5 Degree) as it moves around the sun. Direct sunlight produces more heat than the indirect light.
Direct sunlight days are called as summer where the heat will be maximum which are known as “Agni Nakstra – Kathiri ”
இதில் சூரியனின் கதிர் நேர்கோணத்தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். (படம் காண்க)
இத்தகைய கத்திரி வடபுலத்தில் உள்ள இந்தியா மட்டும் அல்ல பூமத்திரேகை கீழ் தென்புலத்தில் உள்ள நாடுகளுக்கும் ஏற்படும். தென்புலத்தில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வடபுலத்திற்கு நேர் எதிரான காலத்தில் அஃது இந்தியாவில் குளிர் காலம் எனில் ஆஸ்திரேலியாவில் கத்திரி - மிகவெப்ப காலம்-ஆகும்.(படம் 2)
சமூக பார்வை:
கத்திரி காலத்தில் மிக அதிக வெப்பம் காரணமாக வைரஸ்களால் தோன்றும் அம்மை, காலரா ஆகிய நோய்கள் வரும் என்பதால் நோய் பரவாமல் தடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்கப்படவேண்டும், உடல் திறன்மிக குறைவாக இருக்கும் என்பதால் வெயிலில் அலைச்சலை தவிர்த்தல் நல்லது என்கிற பொது நலன் காரணங்களால் நம்முன்னோர்கள் இந்த கத்திரி நாட்களை தவிர்த்தனர்.
சிவன் கோவில்களில்:
அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கர்பகிரகத்தில் சிவலிங்கத்தின் மீது தாரா பாத்திரம் எனும் கலம் தொங்கவிடப்பட்டு அதில் வெற்றி வேர் இட்டு, பன்னீர் நிரப்பி சொட்டு சொட்டாக பன்னீர் சிவலிங்கத்தின் மீது விழும் வகையில் அமைத்திருப்பார்கள். இதனால் அக்னிநட்சத்திரத்தில் சிவன் உக்கிரம் தனிந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பது ஐதீகம்.
மேலும் சிவலிங்கம் 3 பிரிவுகாளல் ஆன தாகும், இவை அனைத்தும் சாந்து கொண்டு பிணைக்கப்பட்டு இருக்கும், அக்னி நட்சத்திர காலத்தில் சாந்து காய்ந்து சிவிலிங்கம் ஆவுடையாரில் இருந்து பிரிவதை தடுப்பதற்கும் தார பாத்திரத்தில் இருந்து விழும் நீர் உதவுகிறது
குறிப்பு: புவி சுயசுழற்சி மைய அச்சு சூரிய, சந்திர ஈர்ப்பு விசை காரணமாக மெதுவாக எதிர்மறையாக பம்பரம் போல சுழுலுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கணிக்கப்பட்ட பருவகால அனுமான கணிதம் தற்பொழுது பல வேறுபாடுகளை காட்டுகிறது எனவே தற்பொழுது அதிக பட்ச வெப்பம் ஏற்படும் நாள்கள், பருவசூழல்கள் மாறுதல் அடைந்துள்ளன என்பது அறிவியல் ஆய்வுகளின் முடிவு (இப்படிப்பட்ட சுழற்சியை மேலை நாட்டினர் தற்பொழுதுதான் கண்டு பிடித்துள்ளனர் ஆனால் 1000ஆண்டுகள் முன்னர் ஆர்யபட்டர் எழுதிய ஆர்யபட்டீயம் எனும் நூலில் இதுபற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளார். இது இந்திய வானியலாளர்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்துகிறது
கடந்த ஆண்டுகள் அக்னி நட்சத்திர கட்டுரைகள் - விளக்கங்கள்
2012 அக்னி நட்சத்திர தேதி - விளக்கம்
2011 அக்னி நட்சத்திர தேதி - விளக்கம்
2010 அக்னி நட்சத்திர தேதி - விளக்கம்
2009 அக்னி நட்சத்திர தேதி - விளக்கம்
www.prohithar.com
31.3.2012
|