| |
குரு பெயர்ச்சி மற்றும் 2009 ஆண்டு பலன்
Guru Transist and 2009 year Prediction
|
இதில் மிகைப்படுத்தல், வார்த்தை கூட்டல் இன்றி நிகழ்வு சூழல் (யதார்த்தம்) அடிப்படையில் தரப்பட்டுள்ளது |
வேண்டுகோள் : இதில் ஆங்கிலம் கலவாமல் தரமுயற்ச்சித்தேன் ஆயினும் தவிர்க்க முடியாத சூழலில் சிறய அளவு ஆங்கிலம் கலப்பு ஏற்ப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன், தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
எதிர்காலவியல்(Astrological) கணிப்பு என்கிற இந்த கட்டுரையில் சந்திரன் (தங்களின் நட்சத்திரம் உள்ள இராசி) நின்ற ராசியை வைத்து எதிர்வரும் 2009ஆண்டு குரு, சனி, ராகு, கேது கோள்களின் வான் நிலைகள் புள்ளிவிபரம்(Planets Ephemeris Data) கொண்டு திருக்கணித முறைப்படி நிராயண (Sidereal)அடிப்படையில் கனித்துள்ளேன்.
எதிர்காலவியலில் பலன்கள் வெறும் இராசி சந்திரன்-கோள் நிலை (கோசாரம்)அடிப்படையில் மட்டும் முழுமையாக கனிக்க இயலாது , பிறப்பு இலக்னம் (Ascendant) கோள்நிலை(ஜனன ஜாதகம்), நடப்பு(விம்ஷோத்ரி) தசை – புக்தி- அந்தாரத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து ஒப்புநோக்கி பின்னரே முழுமையாக கனிக்க இயலும். அப்படியே கனித்தாலும் முற்பிறவியின் செயல்கள்(கர்மா), மூதாதையரின் நன்மை தீமைகள்(பாவ புன்யம்) ஆகியனவும் மணித வாழ்வினை நிர்ணயிக்கிறது என்கிறார் அகத்திய மாமுனிவர்.
நன்மைகளை எதிர்கொள்ளும் நாம் தீமைகள் வராமல் தடுக்க இறைவழிபாடு மற்றும் சரியான அறவழி (தான தர்மம்)களை நாடுவதே நன்று.
குரு :: மகரத்தில் குரு நீசம்
குரு பகவான் சூரியனை 360 பாகை சுற்றிவர 11.86 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார் இதில் ஒரு ராசியில் (30 பாகை) சுமார் ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்து தகுந்த பலன்களை தருகிறார்.
சந்திரன் நின்ற ராசியில் இருந்து குரு 2தனூர், 5 கன்னி, 7 கடகம், 9 ரிஷபம், 11 மீனம், பார்க்கும் காலத்தில் மிகவும் நற்பலனையும், மாறாக 1, 3, 4, 6, 8, 10, 12 இடங்களில் குரு இருக்கும் காலங்களில் பின்னடைவும் ஏற்படும், ஆறுதலாக இவ்வருடம் மேஷம், துலாம் இராசிகளுக்கு நடுத்தர பலன்களை தரவுள்ளார்.
9 டிசம்பர் 2008 அன்று குரு தனூர் இராசியில் இருந்து மகர இராசிக்கு செல்கிறார் (270 பாகைக்கு மேல் 300 பாகை) அங்கு 19 டிசம்பர் 2009 வரை வசிக்கிறார்,
குரு முன்னோக்கிய (Retrograde Motion) நிலையில் மே 1 முதல் கும்பராசியில் பிரவேசிக்கிறார் ஜூன் 15 அன்று பின்னோக்கிய பயனத்தை துவங்கும் குரு மீண்டும் 30ஜூலை 2009 அன்று மகர ராசிக்கு திரும்புகிறார்(வானியல் முறைப்படி கிரகங்கள் பயனம் முன்னோக்கி தான் அமையும். புவியின் பயண பாதை வேகத்தின் காரனமாக குரு முந்துவதும், பின்னோக்குவதும் போல் தோன்றும்.) குருவின் மொத்த வக்கிர காலம் 120 நாட்கள் ஆகும்.
2009ல்குரு நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம்
உத்திராடம் : ஜனவரி 22 வரை
திருவோணம்: ஜனவரி 22 முதல் மார்ச் 22 வரை, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 23 வரை
அவிட்டம் : மார்ச் 22 முதல் அக்டோபர் 3 வரை , அக்டோபர் 23 முதல் 21 ஜனவரி 2010 வரை |
சனி :: சிம்மத்தில் சனி பகை
சனி பகவான் 2009 ஆண்டு செப்டம்பர் வரை சிம்மராசியில்(120பாகை மேல் -150 பாகை வரை) இருந்து 3,6.7,10,11 இடங்களுக்கு பலன் தருவார் பின்னர் கன்னிராசிக்கு பெயற்கிறார். இடையில் வக்கிர கதியாகவும் சஞ்ஞரிக்கிறார்.
ராகு : மகரத்தில் நட்பு , கேது :: கடகத்தில் பகை
ராகுவும்(Ascending Node), கேதுவும்(Descending Node) 19 நவம்பர் 2009 வரை கும்பம், கடகத்திலும் வசிக்கின்றனர் பின்னர் முறையே எதிர் மறை பயணமாக(Anticlockwise) மிதுன, தனூர் ராசிகளில் நுழைகிறார்கள் 1,2,3,6,7,11,12 இடங்களுக்கு பலன் தருவார்
கிரக நிலைகள் (சந்திர ராசியில் இருந்து)
|
குரு |
சனி |
ராகு |
கேது |
மேஷம் |
10 |
5 |
10 |
4 |
ரிஷபம் |
9 |
4 |
9 |
3 |
மிதுனம் |
8 |
3 |
8 |
2 |
கடகம் |
7 |
2 |
7 |
1 |
சிம்மம் |
6 |
1 |
6 |
12 |
கன்னி |
5 |
12 |
5 |
11 |
துலாம் |
4 |
11 |
4 |
10 |
விருச்சிகம் |
3 |
10 |
3 |
9 |
தனூர் |
2 |
9 |
2 |
8 |
மகரம் |
1 |
8 |
1 |
7 |
கும்பம் |
12 |
7 |
12 |
6 |
மீனம் |
11 |
6 |
11 |
5 |
மேஷம்- Aswini, Barani, Kirthika 1 padam
குரு : 10ல் பதவி மாற்றம், பண நஷ்டம்
சனி : 5ல் உறவு தற்காலிக பிரிவு, துக்க செய்தி
ராகு : 10ல் நோய், புகழ் இழப்பு, கலை வளர்ச்சி
கேது : 4ல் தீயோர் நட்பு, இரத்த சம்பந்தமான நோய், காய்ச்சல் |
 |
தங்களின் ராசிக்கு இதுவரையில் 9ல் இருந்த குரு 10-ம் இடத்துக்கு வருகைதந்துள்ளார். இதனால் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை ஆயினும் வேலையில் இடமாற்றம், நிலமையில் மாற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு 9, 12-ஆம் இடங்களுக்கு அதிபதியாவான். அத்தகைய குரு 10-ஆமிடத்தில் இருப்பதால் தெய்வீக சிந்தனையும் ஓங்கும்,. அறவழியை மனம் நாடும். சுப நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யவீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் சாத்தியமாகும். பண வரவு அதிகரிக்கும். பேச்சாற்றல் கூடும். கேதுவைப் குரு நேராக பார்ப்பதால் 4ம் இடத்துக் கேதுவால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையும். ஆயினும் நன்பர்கள் மூலமாக தொல்லைவரலாம் எனவே நட்பினை நல்லதாக அமைத்துக் கொள்வது தேவையற்ற பிரச்சனைகளை தடுக்கலாம். குரு வக்கிரம் பெறும் காலத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். மொத்தத்தில் இந்தக் குருமாற்றம் உங்களுக்கு நன்மைதீமை இரண்டும் கலந்த பலன்களைக் காணக் கூடியதாகவிருக்கும்.
ராகு பத்தாம் இடத்தில் இருப்பதால் நோய் ஏற்பட்டு தங்களுக்கு இன்னல் உருவாகும் ஆயினும் குரு சேர்கையால் நோய்பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவும்
சனீஸ்வரன் மூலமாக நல்லவைகள் நடைபெறுவது தடங்கலாகும் எனவே வெளிநாட்டு பயணத்தை நன்கு திட்டமிடவும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு தற்காலிக பிரிவு ஏற்படும். கூடுமானவரை விதண்டாவாதம் பேசாமல் அமைதி காக்கவும்.
இந்த ஆண்டு தங்களுக்கு பெரிய சாதனையும் இல்லை சோதனையும் இல்லை!
கவனம் செலுத்தி முன்னேறவும்
பரிகாரம் |
ரிஷபம் - Kirthika 2,3,4 padam ,Rohini, Mrigasira 1,2 padam
குரு : 9 மணைவி மக்கள் சுகம், வருவாய், வளர்ச்சி, மேம்பாடு
சனி : 4 தாயார் உடல்நிலை கவனம், கலகம், வேறு நாடு பயனம்
ராகு : 9 எதிரிக்கு பலம், கட்டுப்பாடான சூழல், காரிய குறைபாடு
கேது : 3 தனலாபம், எதிரியை வெற்றிகொள்ளுதல், முருகன் அருள்
|
கஷ்டங்களை தந்து படாதபாடு படுத்திய எட்டாமிடத்து குரு தற்பொழுது பாக்கியஸ்தானமான 9ஆம் இடத்திற்கு நல்லது செய்ய வருகைதந்துள்ளார். குரு பொருளாதாரத்தில் உயர்வு நிலை அடையும் வகையில் உதவிடுவார். நின்றுபோன நற்காரியங்கள் இனி விரைவாக நடக்கும். விரைவில் புதுமனை புகுவிழா, திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். எதிர்பாரத வகையில் சில உதவிகள் வரும். வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். தூரத்து மக்களால் நன்மை பல வந்து சேரும். இறைவழிபாடு மிக நல்ல பலனை தரும், திருக்கோவில் சுற்றுலா நல்லது. எண்ணியவை நிறைவேறும்.. கல்வியலாளர்கள், ஆன்மீக துறையினர் மேம்பாடு அடைவார்கள்.
9ம் இடத்துக் குருவாக அமர்ந்த குருபகவான் உங்கள் ஜன்ம ராசியையும், 3(சகோதரஸ்தானம்), 5(புத்திரஸ்தானம்)ம்இடங்களையும் பார்ப்பதால் குடும்பத்தில் பிரிவு நீங்கி ஒற்றுமை ஏற்படும், சொத்துப்பிரச்னைகள் தீரும், தங்களின் வேலை இடத்தில் தகுதியும், மதிப்பும் கூடும். மனதில் நம்பிக்கையும், மகழ்ச்சியும் பெருகும். குரு வக்கிர கதியில் இருக்கும் பொழுது, சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக மதிப்புக் குறையும். பிள்ளைகள் மேல் கவனம் தேவை. அலுவல் இடமாற்றம் ஏற்படும்.
சனி 4ல் சஞ்சரிப்பதால் சில வேளைகளில் மணக்குழப்பம் ஏற்படும். தாயார் உடல் நிலையில் கவனம் செலுத்தவும். குரு நற்பலனை தந்தாலும் அதை குறைக்கும் விதமாக சனி இருப்பதால் உறவினர் முலம் தொல்லைகள் ஏற்படும். அதிக கவனம் செலுத்தி தொழிலில் பாடுபடுவது நல்லது. பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும்.
ராகு 9ல் இருப்பது எதிரிகளுக்கு சாதகமான சூழல் எனவே குருவுடன் சேர்ந்ததால் எதிரியின் தொல்லை குறைவாகவே இருக்கும் இருப்பினும் எதிரிகள் மூலம் வெற்றி தாமதமாகலாம். 3ஆம் இடத்து கேது, குருவின் பார்வையால் எதிரிகளை வெல்லும் ஆற்றலை தருவார், லாபாமான சூழலும் ஏற்படும்.ராகு கேது பெயர்ச்சிக்கு பின்னர் 2009 இறுதியில் ராகு கேதுவால் நன்மை குறையும்.
கோசாரப்படி வரும் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு 70% நண்மை தரும்.
மிருக சீருடம் நட்சத்திரத்தினர் 2009 ஜனவரி 22 வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
பரிகாரம் |
 |
Midunam மிதுனம் நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம் 3ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம்.
குரு : 8 துக்கம், நோய், கஷ்டம், நிலை தடுமாற்றம்
சனி : 3 செயல் வெற்றி, கால்நடை வளர்ப்பு லாபம், சுகம்
ராகு : 8 முயற்சி தடங்கல், உறவினர் பிரிவு, வேறு நாடு செல்லுதல்
கேது : 2 திருட்டு பயம், அரசு ஆதரவற்ற நிலை, நெருப்பு பயம், தீயவழி சிந்தனை |
 |
களத்திரஸ்தானத்தில்(7ல்) இருந்த குரு ஆயுள் ஸ்தானத்தில் வருகை தந்துள்ளார் இது சற்று அதிகமான சோதனைக்காலம் ஆகும், மேலும் குடும்ப உறவில் தொல்லைகள் வரும் குறிப்பாக கணவன் மனைவி இடையே பூசல்கள் எழும். விட்டுக்கொடுத்து பொறுமையாக இருக்கவும்
நன்பர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை ! தீய நட்புகளால் தாங்கள் மிகவும் அவமானப்பட வேண்டியிருக்கும் எனவே புதிய நட்புகளை மிகவும் கவனத்துடன் கையாளவும்.
பெண்கள், சமையல் கலைஞர்கள் அடுப்பங்கரையில் எச்சரிக்கையாக இருக்கவும் தீக்காயம் ஏற்பபடும்.
எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு வரவைவிட செலவு பலமடங்கு ஏற்படும், சிலருக்கு வாழ்க்கை நடத்துவதுகூட கடினமாகிவிடும். கடன் வாங்கும் சூழல் ஏற்படும் எனவே சிக்கனமாக இருக்கவும்.
தற்பொழுது செய்யும் தொழிலை மிகவும் சிரமத்துடன் நடத்தவேண்டிவரும். புதிய தொழில் முயற்சி எதையும் நவம்பர் 2009 வரை தொடங்கவேண்டாம். தொழில் விஷயத்தில் மிகவும் மந்தமாக இருக்கும் சிலருக்கு பெருத்த நஷ்டம்ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் எந்த பலனும் இல்லை கூடுமானவரை தவிர்க்கவும். மூதாதையர் இடத்தை விற்பதில் தடங்கல் ஏற்படும்,
வெறுப்பும் நிம்மதியின்மையும் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கலாம் எனவே யோகாசனம், தியானம் வழிகளை நாடுவது மிக சிறந்தது.
தங்களுக்கு கெட்டபெயர் எற்ப்படும் கிரக சூழல் எனவே பணியிடத்தில் மிக கவனமாக இருக்கவும். குறிப்பாக பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தலையிடவேண்டாம், புதியவர்களுக்கு சாட்சி கையழுத்து போடவேண்டாம்.
கூடுமானவரை வாகன பயனங்களை தவிர்க்கவும். உடமைகள் திருட்டு போகும். முன்பின் தெரியாதவர் வசம் கவனம் தேவை. உடல்நிலையில் கவனம் தேவை மருத்துவ செலவுகள் கூடம் !
எட்டில் ராகுவும் சேர்ந்து தங்களின் கஷ்டத்தை மேலும் அதிகப்படுத்தும் இதனால் தங்களின் சாதாரண வேலைகள்கூட தாமதமாகும். மிக நெருங்கியவர்கள் உடல்நிலை பாதிக்கபடலாம். இடமாற்றம் உண்டு ஆயினும் இதனால் பலனைவிட விரையம் தான் அதிகம் ஏற்படும்
மாணவர்கள் மிகமிக கவனத்துடன் அதிக அக்கரையுடன் படிக்கவேண்டும்
3ஆம் இடத்து சனியால் நல்ல பலன்களும் சில நடக்கும் என்பது மிகவும் ஆறுதலான விஷயம்.
2009 கடைசி 2 மாதங்கள் குரு வக்கிர, ராகு- கேது பெயர்ச்சியால் நிலமை சீரடையும். நல்லவேகள் நடைபெறும். கூடுமானவரை ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு அமைதியை நாடவும். தினமும் விநாயகர், சிவன், முருகரை ஸ்தோத்திர்ம செய்யவும், ஜபம் செய்வது நற்பலனை தரும்.
மிருக சீருடம் நட்சத்திரத்தினர் 2009 ஜனவரி 22 வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
திருவாதிரை நட்சத்தினர் 2009 ஜனவரி 22 முதல் மார்ச் 22 வரை, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 23 வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
புனர்பூசம் நட்சத்தினர் மார்ச் 22 முதல் அக்டோபர் 3 வரை , அக்டோபர் 23 முதல் 21 ஜனவரி 2010 வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
பரிகாரம் |
கடகம் Kadgam - Poonarpoosa 4 padam, poosam , Aailyam
குரு : 7 பணலாபம், பெண் சுகம், திருமணம் கூடுதல், செல்வாக்கு
சனி : 2 குடும்பத்தில் பிரிவு, தனநஷ்டம், வெளிநாடு பயணம், திருட்டு பயம்
ராகு : 7 தன்னிலும் தாழ்ந்த பெண் தொடர்பு, நாட்டைவிட்டு வெளியேறுதல்
கேது : 1 செயலில் தோல்வி, எதிரி தொல்லை, நோய் |
அமைதி குலைத்து ஆறாம் இடத்தில் ஈராறு மாதமாக இருந்த குரு பகவான் தற்பொழுது தங்கள் இராசியின் நேர் பார்வையான 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்து சுப பார்வையால் கடகராசியை ஆசிர்வதிக்கிறார். 6, 9 இடத்து குரு 7ல் இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
கடந்த காலத்தில் எதிர்ப்பார்த்து போராடிய சில விஷயங்கள் தானாக கைகூடும். நல்ல உறவுகள், நட்புகள் அமையும். நீண்ட நாள் திருமண தடை நீங்கி மங்களகரமாக திருமணம் கைகூடும். தம்பதி பூசல் நீங்கி ஒன்று சேர்வார்கள். கணவன் மணைவி உறவு மேம்படும். குடும்ப புகழ்கூடும். குடும்ப ஒற்றமை ஓங்கும்.
விதவை, விவாகரத்து பெற்றவர்களின் 2ஆம் திருமண ஏற்பாடு வெற்றிபெறும். வாழ்வில் இது புதுவசந்தகாலம் ஆகும்
குழந்தை பேறு அமையும். நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களின் மருத்துவ முயற்ச்சி வெற்றிபெறும். குழந்தைகளினால் நற்பெயர் கிட்டும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். பாகப்பிரிவினை பெரும் தொல்லையின்றி முடியும். தாயார், மனைவி வழி பூர்வீக சொத்துக்கள் வரும்வாய்ப்பு உண்டு.
பொதுவாழ்வில் ஈடுபடுவோர்களுக்கு இது பொன்னான காலம், நற்பெயர் பெறுவார்கள். வருட கடைசி அவ்வளவு பலன் தராது.
நீண்ட நாள் புதுவீட்டு வேலைகள் சுபமாய் முடிந்து புருமனை புகுவிழா நடைபெறும். புது வீடு கட்ட துவக்கலாம் தடையின்றி முடியும், இது தொடர்பான ஆயத்த பணிகள், வரைபட அனுமதி, வங்கிக்கடன் ஏற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும். வருட முடிவில் கட்டிட துவக்கம் விரைவாக முடியாது
தொழில் வழிகளில் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தை தரும். இந்த ஆண்டில் லாபத்தை எதிர்பார்க்கலாம் ! மாற்று தொழிலில் ஈடுபட்டாலும் பலன் கிடைக்கும். ஏற்றுமதி நல்ல பலனை தரும். வருட கடைசியில் எச்சரிக்கை தேவை.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நற்பெயர், பதவி உயர்வு, இடமாற்றம் உண்டு. நீண்ட நாள் வேலை இல்லாமல் அல்லல் படும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி வரும் தற்பொழுது கிடைக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றால் வாழ்வில் வளம் பெறலாம். வெளிநாட்டு வேலை கைகூடும். வெளியூர் பயணங்கள் வெற்றியை தரும்.
கோசாரப்படி நல்ல பலனை குரு தந்தாலும் சனியின் வீட்டில் நீசமாக இருப்பதால் வெற்றி பெற முயற்சி அவசியம் தேவை. வருட முடிவில் மற்றும் ஜூன் ஆகஸ்டு மாத இடையில் வக்கிரத்தில் குரு பயனிக்கும் காலத்தில் கடினமான சூழல் ஏற்படும். 2ஆம் இடத்து சனி 3ல் போகும் பொழுது சனியின் தாக்கம் குறையும் ஆயினும் வருட துவக்கத்தில் சனியால் சில தொல்லைகள் வரும் குறிப்பாக சிறு விபத்துக்கள், நோய்கள் ஏற்படும். பயணத்தில், உடல்நிலையில் கவனம் தேவை
குருவின் பலனை சனி குறைத்து விடுவார் எனவே என்னதான் நல்ல காலமாக இருந்தாலும் முன்பின் தெரியாதவர்களிடத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனம் தேவை.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு குரு தந்தாலும் சனி மற்றும் கேது கிரகத்தால் தடங்கல் ஏற்படும், ஏஜன்ட்களிடம் பணத்தை தரும் காலத்தில் மிக எச்சரிக்கை தேவை! இல்லையெனில் ஏமாற்றம் தான் மிஞ்சும் !!
குருவின் யோககாலத்தில் ராகுவும் சேர்ந்து பயனிப்பதால் பெண் தொடர்பு ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சனைகள் எழும். பெண்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை இல்லை எனில் குடும்ப நிம்மதி குறையும்.
மாணவர்கள் முயற்சி நல்லபலனை தரும், உயர்படிப்பில் உள்ளவர்களுக்கு உகந்த காலம்.
திருநங்கைகள்(அரவானிகள்) புதிய தொழில் துவங்கினால் வெற்றியடைவார்கள்
கோசாரப்படி இந்த 2009 வருடம் 75 விழுக்காடு நல்ல பலன் கிடைக்கும்.
ராகு, கேது, சனி கிரகத்தினை வழிபடவும். தினமும் பகவத்கீதையை படித்தல் நன்று.
புனர்பூசம் நட்சத்தினர் மார்ச் 22 முதல் அக்டோபர் 3 வரை , அக்டோபர் 23 முதல் 21 ஜனவரி 2010 வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும
பரிகாரம் |
 |
சிம்மம் - Makam , Pooram, Uttiram 1 padam
குரு : 6 மந்தம், நோய்வசப்படுதல்
சனி : 1 உறவுகள் துண்டிப்பு, தீ விபத்து, வியாதி, நாட்டைவிட்டு வெளியேறுதல்
ராகு : 6 வெற்றி, எதிரிகள் தொல்லை நீங்கும், லாபம்
கேது : 12 தனநஷ்டம், பார்வை கோளாறு, மயக்கம
|
 |
ஜென்ம சனியின் தாக்கத்தை 5ஆம் இடத்தில் இருந்து திரிகோணபார்வையால் நன்மை தந்த குரு தற்பொழுது 6ஆம் இடத்தில் (சத்ருஸ்தானம்) பெயர்ந்துள்ளார் இந்த மாற்றம் தங்களுக்கு பெரிய மாறுதல்களை தராது ஆயின் தொல்லைகள் கூடும.
தங்களின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருக்கும் இதனால் அதிக தொல்லைகள் ஏற்பட்டு பெயருக்கு களங்கம் ஏற்படும.
இனம்புரியாத உணர்வு, துணிவின்மை ஏற்பட்டு பயம் மிகும். முடிவுகள் எடுப்பதில் முறன்பாடுகள் உண்டாகும் இதனால் கருத்து வேறுபாடு மிகுந்து மற்றவர்கள் மீது கோபம் ஏற்படும.
கூடுமானவரை மற்றவர்களின் கருத்துக்களை மதித்து நடந்தால் இக்கட்டான நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம.
வேலை இடத்தில் கருத்துவேறுபாடு ஏற்படாதபடி எச்சரிக்கை தேவை.
உடலில் குறிப்பாக மந்த நோய், அஜிரணம் ஏற்படும் உணவில் எச்சரிக்கை தேவை. குரு வக்கிர கதியில் செல்லும் பொழுதும் வருட கடைசியிலும் தங்களுக்கு நன்மைகளை தருவார்
கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்காது, பணம் வரவு சற்று குறையும்.
தொழில் வளம் அவ்வளவு ஏற்றம் அளிக்காது ஆயினும் பெரும் நஷ்டம் ஏற்படாது.
ஜென்மத்தில் சனி இருப்பதால் துயரம் மிகுந்தாலும் சனி தனது பாதி (அரை) பயணத்தை தான்டியதால் சற்று நிதானம் ஏற்படும் இதனால் குடும்பத்தில் வெளிநாடு பயணங்கள் ஏற்படலாம். மிகுந்த அன்பு உடையவர்கள் வெளியூர் இடமாற்றத்தால் பிரிய நேரலாம். அக்டோபர் மாதம் பிறகு சனி 2ல் போகும் பொழுது சற்று மேம்படலாம்.
குடும்ப ஒற்றமை விளங்க விட்டகொடுத்து வாழ வேண்டும் என்கிற மந்திரத்தை கட்டாயம் இந்த சூயலில் கடைபிடித்தே ஆகவேண்டும். குறிப்பாக உத்திரம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் அதிக கவனத்துடன் இருப்பின் இல்வாழ்கை இனிக்கும்
இவ்வருடத்தில் ராகு மட்டுமே 6ல் இருந்து நன்மை செய்யும் நிலையில் உள்ளார். இதனால் எதிரிகளை வெற்றி பெற மனதிடம் ஏற்படும் குரு, சனியின் தாக்கத்தை ராகு சற்று தனிப்பார். எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு வரும்.
கேது 12ல் இருப்பதால் தலை சம்மந்தமான நோய் ஏற்படலாம்
பெண்களுக்கு கடந்த 2008 ஆண்டு போன்றே சற்று கடினமாக இருக்கும் வருட முடிவில் திருமணம் போன்று சுபகாரியங்கள் ஏற்படும், முன்னேற்றம் உண்டு.
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் குறிப்பாக முழுஆண்டு தேர்வில் தங்களின் முயற்சி மட்டுமே வெற்றியை தரும். ஜூன் மாதத்தில் குரு வக்கிரகதி காலத்தில் தங்களின் விருப்பப்படியே மேற்படிப்பு அமைய வாய்ப்பு ஏற்படும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் எதிரிகளின் தொல்லை குறைந்தாலும் புகழுக்கு களங்கம் ஏற்படும். நவம்பர் வரை பொறுமை தேவை.
கோசாரப்படி இந்த 2009 வருடம் 45 விழுக்காடு நல்ல பலன் கிடைக்கும். மகம், பூரம் நட்சத்திரத்தினருக்கு சனியின் தாக்கம் சற்று குறையும் என்பது ஆறுதலான செய்தி.
குரு, கேது, சனி கிரகத்தினை வழிபடவும். தினமும் சிவபுராணம் படித்தல் நன்று.
பரிகாரம் |
கன்னி - Uttiram 2,3,4 padam, Hastam, Chittarai 1,2 padam
சனி : 12 துக்கம், நஷ்டம், நாட்டைவிட்டு வெளியேறுதல்
ராகு : 5ல் உறவு தற்காலிக பிரிவு, துக்க செய்தி
கேது : 11 தனலாபம் சுகம்
|
4ல் இருந்த குரு கடினசூழலை தந்தநிலை மாறி தற்பொழுது 5ல் புத்திரஸ்தானத்தில் திருகோண பார்வையால் வருகை தந்துள்ளது மிகவும் நன்மை தரும். கடந்த ஆண்டில் இழந்த நிம்மதி முழுமையாக மீளும் என்று சொல்லமுடியாது ஆயினும் 70 % நன்மை கிட்டும்.
பாக்யஸ்தானமான 9ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும் , நீண்டநாள் மணக்கசப்புகள் , சகோதர – சகோதரி பிரிவுகள் குறைந்து குடும்பம் அமைதியான சுழலாக விளங்கும். தகப்பனார், மூதாதையார் வழி சொத்துக்கள் வரும் வாய்ப்பு உண்டு
மணைவி-கணவன் உறவு மேம்படும். நீண்ட நாள் திருமண தடை நீங்கும். திருமண ஏற்பாடுகள் ஆண்டின் முன் முக்கால்பாகத்தில் அமையும். விவாகரத்து வழக்குகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு மீண்டும் புதுவாழ்வு ஏற்படும்.
மறுமணம், விதவை மறுமணம் ஏற்பாடு வெற்றியளிக்கும் ஆயினும் 7ஆம்இடத்தின் அதிபதி 5ல் இருப்பதால் நன்கு ஆராய்ந்து திருமணம் செய்யவும்
குழந்தைகள் மூலமாக நல்லபெயர் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு பாக்கியம் ஏற்படும். மருத்துவ அடிப்படையிலான சோதனை குழாய் குழந்தை வெற்றியளிக்கும். குழந்தை தத்து எடுக்க நினைப்பவர்களுக்கு இது உகந்தகாலம்
நட்பு சூழல் மேம்படும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை பல வந்து சேரும்.
சமூகத்தில் தங்களின் மேல் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு. அந்தஸ்து உயரும்.
முன்பாதியில் புதிய பொருள், இல்லம், வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டு
வேலை வாய்ப்புகள் சூழல் முதல் 10 மாதங்கள் நன்றாகவும், பதவிஉயர்வை தரும். மேம்பட்ட வேலைமாற்றம் உண்டு
பெண்களுக்கு மிகவும் நன்மை தரும், நகை வாங்குவீர்கள் தங்களின் நியாயமான எதிர்பார்புகள் 70% நிறைவேறும்.
வனிகர்களுக்கு நன்மை தரும் ஆண்டு, பின் கால்பகுதி சற்று கடினம். புதிய முயற்சிகள் வெற்றிதரும் ஆயினும் தெரியாத தொழில் பலன்தராது.
மாணவர்களுக்கு மிகவும் உகந்தகாலம் தாங்கள் விரும்பும் பாடத்தில் மிகவும் வெற்றிகிட்டும். பொறியியல் படிப்பு வாய்ப்பு நல்கும்
இராணுவத்தினருக்கு மிகவும் நன்மை தரும் ஆண்டிது!
குருவின் நன்மைகளை 12ஆம் இடத்து ஏழரை ஆண்டு சனி குறைக்கும் வாய்ப்பு உண்டு எனவே குருவால் கிடைக்கும் நன்மை சற்று தடங்கல் ஏற்பட்டு கிடைக்கும். எனவே எதுவும் சுலபாமாக அமையாது என்பது தின்னம். மேலும் கடைசி 2 மாதங்களில் சனி ஜென்மத்திற்கு வருவதால் குருவின் பலன்கள் 25% அளவுதான் பலன் தரும். மேலும் வெளிநாட்டிற்கு போகவேண்டிய சுழல் ஏற்படும். கடன் ஏற்படலாம். வனிகத்தில் குறிப்பிட்ட கடைசி 2 மாதத்தில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கலில் மிகவும் எச்சரிக்கை தேவை. அடுத்து வரும் 2010ஆம் அண்டு வரை திட்டமிடவும் (ஏழரை சனியின் தாக்கம் 2011 நவம்பர் வரை)
ராகு மற்றும் கேதுவால் நன்மைகள் தீமைகள் குரு- சனி போன்றுதான் அமைகிறது ஆண்டின் துவக்கத்தில் எதிர்பாராத வரவு வரும் அதே நேரத்தில் ஆண்டின் இடையில் சிறிய துன்பம் ஏற்படும் மற்றபடி ராகு-கேதுவின் பாதிப்பு-நன்மைகள் கன்னிராசிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை
வருடமுடிவில் சனி முழுமையாக தங்களின் ராசியில் ஜென்மசனி சஞ்ஞரிப்பதால் அதிக கவனத்துடன் நடந்துக்கொள்ளவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுவும்
மதிப்பெண் 70% தரப்பட்டது முதல் 10 மாதங்களுக்கு மட்டும் பின்னர் வரும் மாதங்கள் கனிக்கிடுவதில் சிரமமான சூழல், தங்களின் ஜாதகத்தின் அடிப்படையில் தான் முழுமையாக உரைக்க முடியும்.
பரிகாரம் |
|
துலாம் - Chittarai 3,4 padam; Swathi, Visakam 1,2,3 padam
குரு : 4 சுகம் குறைவு, சகோதர் இடையே பூசல்
சனி : 11 பெண்னால் நன்மை, லாபம், விவசாயத்தில் லாபம்
ராகு : 4 தாயார் உடல்நிலை கவனம், கலகம், வேறு நாடு பயனம்
கேது : 10 பெரும் தடங்கல், நோய், எதிரி தொல்லை
|
 |
இவ்வருடம் குரு 4 இடத்தில் நீசமாக உள்ளதால் வீனான மனஉளைச்சல் ஏற்படும், முயற்சிகள் தடை படும் விரயம் ஏற்படும். திடீர் செலவுகள் உண்டாகும் குறிப்பாக தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிக்கனமாக இருப்பதால் பெரிய தொல்லைகளை தவிர்க்கலாம். கடன் அட்டையால் தொல்லைவரும்.
குடும்பத்தில் சகோதர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு தனிகுடித்தனம் ஏற்படும். சொத்து தொடர்பாக பெரியவர்களின் துணையுடன் பேசி விட்டுக்கொடுத்து செல்வதே நன்று, வழக்கு மன்றம் செல்வதால் நஷ்டம் ஏற்படும்.
ஜாதக பலன், தசை பலன் உள்ளவர்களுக்கு மட்டுமே திடீர் திருமண வாய்ப்பு உண்டு. மற்றபடி திருமண முயற்சி வெற்றிபெற உழைப்பு கூடுதலாக தேவை.
கணவன் மணைவி உறவில் வீன்ஐயம் ஏற்படும். அமைதியாக நன்கு ஆராய்ந்து நடப்பதே பிற்கால வாழ்கைக்கு நன்று. கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டவேண்டாம் அதனால் பிரிவு பெரியதாகும்
வியாபாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை குறிப்பாக மற்றவர்கள் பேச்சை கேட்டு முதலீடு செய்யவேண்டாம். கையிருப்பை அனைத்தையும் தொழிலில் முடக்கவேண்டாம் இதனால் கடன் தொல்லைகள் ஏறப்பட்டு நிம்மதி கெடும். எதிரிகள் தங்களைவிட பலமுடன் விளங்குவார்கள் எனவே மோதல் போக்கை வியாபாரத்தில் காட்டவேண்டாம்.
இடையில் மாரர்ச் மாதத்தில் மகர ராசியில் உள்ள திருவோணம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால்(10ஆம் இடத்து அதிபதி சந்திரன்- தசை நாதன் நட்சத்திரம்) நன்மைகள் வந்துசேரும். வேலை, வியாபாரம், குடும்ப சூழல் மேம்படும்.
மாணவர்கள் இவ்வருடம் கடினமாக உழைக்கவேண்டும் கல்வி, அறிவு ஆகியவற்றின் அதிபதி குரு 4ல் இருப்பதால் இது சற்று கடினசூழல், படிப்பை அதிக விருப்பத்துடன் அனுகினால்தான் வெற்றிகிட்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பணியில் நெருக்கடி ஏற்படும், தரப்படும் வேலையில் அதிக கவனம் தேவை. இடமாற்றம் உண்டு. சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வதால் வீன் தொல்லைகள் குறையும். கடின உழைப்பு பலன் சிறிது !
இந்த ஆண்டு முக்கால் பகுதி சனி பகையாக சிம்மத்தில் இருப்பதால் 11ஆம் இடத்து சனியின் நன்மைகள் பாதியளவே கிடைக்கும். ஆயினும் குருவின் தாக்கத்தை இது சமாளிக்க உதவும் என்பது ஆறுதல் தரக்கூடியதாகும்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பலன் தரக்கூடியதாகும். எதிர்பாராத வகையில் பெண்கள் மூலமாக நல்லவை நடக்கும்.
2009 வருட முடிவில் 12ஆம் இடத்தில் சனி ஏழரை ஆண்டு சனியாக வருகிறார் என்பதால் அதிக கவனம் தேவை. அப்பொழுது சனியின் தாக்கத்தை கும்பத்தில் (5 இடத்தில்) இருந்து குரு நன்மை செய்வார்.
ராகு 4ல் இருப்பதால் தாயர் மற்றும் தாயார் வழியில் உள்ளவர்களின் உடல் நோயினால் பாதிக்கப்படலாம் எனவே உடலை அடிக்கடி மருத்துவரிடம் பரிசோதனை செய்வது நல்லது. தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படும்.
கேது 10ல் அதிக தொல்லைதரும் நிலையில் உள்ளார் எனவே வருவாய் வழிகளுக்கு தடங்கல் ஏற்படும். வருவாய் தாமதமாக வரும். எதிரிகளுக்கு பலம்கூடும்.
இந்த ஆண்டு துலாம்ராசிக்கு மேம்பாடு மிகவும் குறைவு. மதிப்பெண் 55% தரப்படுகிறது.
பரிகாரம் |
விருச்சிகம் - Visakakam 4padam, Anusham, Ketai
குரு : 3 பதவியில் உயர்வுக்கு தடை, வேலை இழப்பு
சனி : 10ல் நோய், புகழ் இழப்பு, கலை வளர்ச்சி
ராகு : 3 செயல் வெற்றி, கால்நடை வளர்ப்பு லாபம், சுகம்
கேது : 9 தனநாசம், நோய் தோல்வி
|
3ல் நீசமாகி உள்ளார். 3ஆம் இடத்து குரு களத்திரம்(7), பித்ருஸ்தானம்(9), லாபஸ்தானம்(11)ஆகிவற்றை பார்பதால் அலைச்சல் ஏற்பட்டு முடிவு நன்கு அமையும்.
இல்லத்தில் மகிழ்சி பொங்கும், கனவன் மனைவி இடையே உறவு நன்கு அமையும், பிரிந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கூடும். திருமணம் சிறு தடங்கல் ஏற்பட்டு நன்கு முடியும், நீன்டநாள் தடைப்பட்ட திருமணம் மேம்பட்ட முயற்சியால் சுமூகமாக அமையும். விவாகரத்து வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்க்கை துவங்கும். முதிர்வு கன்னிகள் (30வயது மேல் உள்ள பெண்கள்) கிடைக்கும் வரனை ஏற்றல் நன்று.
குருவால் தங்களின் புகழ் உயரும். தந்தையார் வழியில் வரவேண்டிய சொத்துகள் சிறு தடை ஏற்பட்டு கிடைக்கும் தந்தை – மகன் உறவுகள் நன்கு இருக்கும். மகனின் தேவைகள் நிறைவடையும்
சகோதர்களிடையே ஒற்றுமை ஓங்கி இல்லத்தில் சண்டைகள் குறையும். பாகப்பிரிவினை சிக்கல் இன்றி நன்கு முடியும். இடையில் குரு 4ல்வக்கிர கதியில் (அக்டோபர்3 முதல் 23 வரை)செல்லும் பொழுது தாயருக்கு உடல் நிலை பாதிக்கும்
09.12.2008 முதல் 22.01.2009 வரை சூரியனின் சாரமான உத்திராடத்தில் (ஜீவனாதிபதியான : சிம்மராசி-10இடம் குரு பயணிப்பதால் நண்மைகள் நடக்கும், மூதாதையர் சொத்து வந்துசேரும்
22.01.2009 முதல் 23.03.2009 வரை சத்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் குரு பயணிப்பதால் தந்தையாருக்கு உகந்தகாலம் இல்லை
23.03.2009 முதல் 20.12.2009 வரை தங்கள் இராசி நாதன் செவ்வாயின்நட்சத்திரமான அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் பொதுவாழ்வில் நன்மை கிட்டும்
வருட துவக்கத்தில் வணிகம் நன்கு அமையும். வரவுகள் சிறு தடங்கல் ஏற்பட்டு வரும். புதிய முயற்சிகள் ஒரளவு பலன் தரும். பெரும் லாபம் ஏற்படாது. சீரான வனிகம் நடைபெறும். வருட முடிவில் சற்று தோய்வு ஏற்படும்.
மாணவர்களுக்கு உகந்த காலம் தாங்கள் விரும்பும் கல்வி அமையும் ஆயினும் கவனம் தேவை. நட்பு வட்டாரத்தில் அதிக கவனம் தேவை !
சனி பகவான் 10ல் இருப்பதால் குருவினால் ஏற்படும் புகழை குறைத்துவிடுவார் மேலும். வரவு சற்று தாமதப்படும். வருட பின்பாதியில் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
சனிபெயர்ச்சிக்கு பின் (11 இடம்) சில நன்மைகள் அமையும்.
ராகுவும் செயல்பாடுகள் குருவின் சேர்க்கையால் நன்மையும், கேது குரு பார்வையால் கேதுவின் தீமை குறைந்தும் 60% நன்மை உண்டு .
திருமுருகனின் கந்தர்ஷஷ்டி கவசம் தங்களுக்கு மேலும் நன்மை கூட்டும்.
முடிவாக இந்த வருடம் சில இழப்புகளை தந்தாலும் 70% சிறப்பானது அமையும்
பரிகாரம் |
 |
தனூர் - Moolam, Pooradam, Uttiradam 1padama
குரு : 2 வரவு, லாபம், வெற்றி
சனி : 9 எதிரிக்கு பலம், கட்டுப்பாடான சூழல், காரிய குறைபாடு
ராகு : 2 குடும்பத்தில் பிரிவு, தனநஷ்டம், வெளிநாடு பயணம், திருட்டு பயம்
கேது : 8 காயம், கட்டி. ரத்தப்போக்கு, மயக்கம்
|
 |
தங்களின் ராசி அதிபதி குரு கடந்த ஆண்டு தங்கள் இராசியில் அமர்ந்து பல தொல்லைகளை தந்தார். தற்பொழுது நல்லது செய்யும் வகையில் 2ஆம் இடத்திற்கு சுபகதியாக பெயர்ந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் இனி படிப்படியாக தீர்க்கப்படும். குறிப்பாக பிரிவுகள் இனி நீங்கி குடும்பத்தினர் ஒன்று சேர்வாகள். பிரிந்த தம்பதியினர் மனக்கசப்பை விட்டு இணையும் காலம் இது. குடும்ப வழக்குகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு இல்லறம் நல்லறமாகும். தாய், தகப்பனார் விட்டு பிரிந்து வாழ்ந்த மகன்கள் உறவு இனி மெல்ல மலரும். சகோதரர்களிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் தீராத சிக்கல்கள் இனி இனிதாக தீரும்.
நீண்ட நாள் தடைபட்ட புதுவீடு கட்டுதல், இடம் வாங்கல், சுபகார்யங்கள் இனி மங்களகரமாக நடக்கும். திருமண ஏற்பாடுகள் சுபமாய் முடியும். தனூர் ராசிக்காரர்களுக்கு இனி திருமண ஏற்பாடு செய்வது நல்லது இவ்வருட முடிவுக்கு முன்னர் திருமணம் நன்று. திருமணம் முடியும் வரை துர்கை அம்மனுக்கு வழிபாடு செய்வது நன்று.
விதவை திருமணம், மறுமணம் ஆகியவை கனிந்து புதுவசந்தம் பிறந்து நல் வாழ்வுஅமையும்.
வணிகத்தினருக்கு இது ஒரு லாபம் தரும் காலம் கடந்த நஷ்டங்களில் இருந்து மீண்டுவருவீர்கள். புதிய வணிகத்தை எச்சரிக்கையுடன் துவக்கவும். புதிய வணிக தொடர்புகள் மூலமாக பலன் அடைவீர்கள். ஆயினும் இடையில் குரு வக்கிர காலத்திலும், வருட முடிவிலும் வனிகம் அதிக லாபத்தை தராது. ஏற்றுமதி சற்றே தலைநிமிரும்.
வேலை இடத்தில் நற்பெயர், பதவி உயர்வு உண்டு, வேலையில் அதிக கவனமும், உழைப்பும் தேவை. வேலை தேடுபவர்களுக்கு சுமாரான வேலையாவது கிடைக்கும் தட்டாமல் ஏற்று அதில் உயரலாம்.
மாணவர்கள் நல்ல புதிய நட்புகளை தேர்வு செய்து பழகுங்கள் அவர்கள் தங்களின் படிப்பிற்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விரும்பும் பாடங்களில் வெற்றிபெறுவீர்கள். இது தங்கள் வாழ்வின் திருப்புமுனை எனவே நல்லதை தேர்வு செய்தால் பிற்கால வாழ்வு இனியதாக அமையும்
ஒய்வுபெற்றவர்களின் நிதி நிலமை சீரடையும். தங்களின் ஓய்வு ஊதியத்தை சிக்கனப்படுத்தவும் சேமிப்பால் இனி வரும் கிரக சூழலில் தாங்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படலாம். மனதை தர்ம செயல்களில் ஈடுபடுத்துங்கள். தெய்வீக சுற்றுலா செல்வீர்கள்.
மொத்தத்தில் இது 75% நன்மை தரும் ஆண்டு. இருப்பினும் சனி, ராகு, கேது தொல்லைகளால் குடும்பத்தில் உடல் நலம் பாதிக்கப்படலாம். பணபரிமாற்றத்தில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்
|
மகரம் - Uttiradam 2,3,4 padam; Thiruvonam, Avitam 1,2 padam
குரு : 1 நிலைமாற்றம், குடும்பத்தில் பிரிவு, கலகம், பின்னடைவு
சனி : 8 முயற்சி தடங்கல், உறவினர் பிரிவு, வேறு நாடு செல்லுதல்
ராகு : 1 உறவுகள் துண்டிப்பு, தீ விபத்து, வியாதி, நாட்டைவிட்டு வெளியேறுதல்
கேது : 7 நோய், அலைச்சல், கணவன் மணனவி சண்டை , எதிரி தொல்லை
|
தற்பொழுது குரு தங்களின் ராசியிலேயே சஞ்சரிப்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை.
தஙகளின் நட்சத்திரத்தில் (விபரம் முகவுரையில் தரப்பட்டுள்ளது) குரு பயணிக்கும் பொழுது மிக அதிக எச்சரிக்கையுடன் நடந்துக்கொண்டு பெரும் நஷ்டத்தை தவிர்க்கலாம். அதே நேரத்தில் குரு கும்பத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிக நல்ல மாறுதல்கள் நிகழும்.
குரு தனது 5ஆம் பார்வையால் பூர்வ புன்னிய, புத்தரஸ்தானத்தை பார்பதால் தங்களின் குழந்தைகள் மிகுந்த பொறுப்புடன் நடந்து நற்பெயர் ஈட்டுவார்கள். புத்திர பாக்யம் வேண்டுபவர்களுக்கு உகந்த காலம். செயற்கை கருவூட்டல் வெற்றிதரும்.
பரம்பரை சொத்து சிறு பூசல் ஏற்பட்டு நல்லதாக முடியும் இதன்மூலம் புதிய இடம், வீடு வாங்கலாம். வங்கிகளில் வீட்டுக்கடன் கிடைக்கும்
ஜென்ம குரு என்பதால் சிறு பிரிவு உண்டு. வேலைநிமித்தமாக வெளிநாடு, வெளயூர் செல்லும் காலம் இது.
கணவன் மணைவி இடையில் சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும், சில நேரத்தில் நிம்மதியற்ற சூழல் போன்று தோன்றும். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். விதன்டாவாதம் பேசாமல் இருந்தால் குடும்பத்தில் அமைதி குலையாது. விவாகரத்து வழக்குகளில் தோல்வியே மிஞ்சும் அதைவிட விட்டுக்கொடுத்து வாழலாம்.
பெண்கள் தேவைகளை குறைத்து வாழ்வது நல்லது. கணவரிடம் மிகுந்த அன்பு செலுத்துங்கள். வதந்திகளை நம்பி வின் மன உளைச்சல் அடையவேண்டாம்.
அடுத்தவர்களின் உடமையை பொறுப்புடன் கையாளவும், தவறவும் திருடுபோகும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களின் விஷயத்தில் தலையிட்டால் அவமானம்தான் மிஞ்சும்
அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது அதிக எச்சரிக்கை தேவை. நம்பிக்கை துரோகம் ஏற்படுத்துவார்கள் குறிப்பாக அடுத்தவர்களுக்காக பணம் தொடர்பாக ஜாமின் போடவேண்டாம்
வணிகம் சற்று மந்தநிலையில் இருக்கும். புதிய வணிக வழிகளில் எச்சரிக்கை தேவை. அதிக நம்பிக்கையும் ஏமாற்றத்தை தரும். கையிருப்பை அனைத்தையும் மற்றும் கடன் வாங்கி முதலீட்டை செய்வதை பலமுறை யோசிக்கவும். வக்கிர காலத்திலும், வருட முடிவிலும் சற்று மேம்பாடு ஏற்படும்
தனூர் இராசிக்காரர்களுக்கு தற்பொழுது அரசின் ஆதரவு இருக்காது எனவே சட்டதிட்டங்களை மதித்து நடக்கவும், ஏற்கனவே நடந்த தவறுகளுக்கு அரசிடம் இருந்து தொல்லைவரும். வழுக்குகள் வெற்றியை தராது எனவே தேவையில்லாமல் பிரச்சனைகளை எழுப்பவேண்டாம்.
மாணவர்கள் கடினமாக படித்தால் தான் வெற்றிபெறமுடியும் கிரகசூழல் தங்களுக்கு அவ்வளவு சாதகம் என்று சொல்லமுடியாது. தட்சினாமூர்த்தியை வியாழன் தோறும் வழிபடவும். படிக்கும் முன்னர் குரு காயத்திரியை சொல்லவும்
இவ்வருடம் தங்களுக்கு எந்த கிரகமும் சாதகமான சூழலில் தொடர்ந்து அமரவில்லை 12 ராசியில் தங்களின் ராசிதான் அதிகபாதிப்புடன் உள்ளது எனவே இறைவழிபாடு ஒன்றே தங்களுக்கு நன்மை தரும்
மதிப்பெண் 35% தரப்படுகிறது. இந்த காலகட்டம் ஒரு சவால் ! எதிர்நீச்சல் போட்டு வெல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகாட்டுங்கள்.
பரிகாரம் |
 |
கும்பம் - Avitam 3,4 padam;Sadhayam, Pooratathi 1,2,3 padam
குரு : 12 வெளிநாடு செல்லுதல், அவமானம், பணநஷ்டம், வேலைமாற்றம்
சனி : 7 தன்னிலும் தாழ்ந்த பெண் தொடர்பு, நாட்டைவிட்டு வெளியேறுதல்
ராகு : 12 துக்கம், நஷ்டம், நாட்டைவிட்டு வெளியேறுதல்
கேது : 6 உலோக வியாபாரத்தில் வெற்றி, பயம் இன்மை, நிலத்தரகு கைகூடுதல்
|
 |
குரு இவ்வருடம் 12 இடத்தில் பெயர்வதால் குறைந்த நன்மையே கிடைக்கும்
குருவின் 5ஆம் பார்வையால் இராசிக்குரிய 4 இடம் நன்மை பெறும் இந்நிலையில் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும், தாயார் உடல் நிலையில் வக்கிரகாலத்தில் மட்டும் மாற்றம் இருக்கும் மற்றப்படி குறை இல்லை. 7ஆம் இடத்து சனி பகையாக அமைந்துள்ளதால் கணவன்-மணைவியிடையில் சிறுசிறு சண்டைகள் சச்சரவுகள் இருப்பினும் ஒற்றமை நன்கு இருக்கும். சகோதரர்கள் ஆதரவு உண்டு
திருமண ஏற்பாடுகள் மந்தகதியில் இருக்கும் கடும் முயற்சியால்தான் முடியும்.
தங்கள் இராசியின் 6ஆம் இடத்தை தனது நேர்பார்வையால் பார்பதாலும், கேது இருப்பதால் எதிரிகள் தொல்லை குறையும், இதனால் தங்களின் மறைமுக எதிர்ப்புகள் விலகி மேன்மை அடைவீர்கள். போட்டிகள் வெற்றியை தரும். இதுநாள் சாதிக்க மூடியாதவற்றை தற்பொழுது சாதிக்க முடியும்
மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். எதிர்பார்த்த கல்வி பிரிவு சிரமத்துடன் கிடைக்கும், வெளிநாட்டு கல்வி அமையும். ஆயினும் இராசி நாதன் சனி நேர்பார்வையால் மந்தபுத்தி வரும் எனவே அதிக கவனத்துடன் படிக்க வேண்டும். மறதியை விரட்ட அதிகம் உழைக்க வேண்டும்
குரு பார்வையால் 8, 10 ஆம் இடமும் நன்மை அடைகிறது இதன்மூலம் தங்களின் வேலைபளு அதிகரிக்கும், பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும், வேலை மாற்றம் நன்கு அமையும். வேலை மாறுதலாக வெளியூர் பயனம் அமையும். பெரும் விபத்துகள் நீங்கி சிறு காயங்களுடன் தப்புவீர்கள். நோய்கள் தாக்கம் குறையும்.
தாய்வழி சொத்துக்கள் வந்து சேரும். புதிய இடம், வண்டி வாங்கும் வாய்ப்புகள் உண்டு, பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு சுமூகமாக முடியும் வழக்குகள் சாதகமாக முடியும்.
வணிகர்களுக்கு அதிக நன்மை இல்லை என்றாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் பரிவர்தனை செய்யவும். புதிய முயற்சிகள் அவ்வளவு பலன் தராது, வணிக எதிரிகள் தொல்லை குறைந்து தங்களின் தயாரிப்புகள் சந்தைபடுத்தல் எளிதாகும். ராகுவின் தொல்லைகளை குரு மட்டுப்படுத்தினாலும் முன்னெச்செரிக்கை தேவை. இவ்வருடம் நிலத்தரகர்களுக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும்
முடிவாக இவ்வருடம் 50% பலன் உண்டு ஆண்டின் வக்கிர குருவால் இடையிலும், பிற்பகுதியில் சனி 8லும். ஜென்ம குருவினால் சிரமம் இருக்கும்.
பரிகாரம் |
மீனம் - Pooratathi 4 padam;Uttiratathi, Revathi
குரு : 11 அனைத்திலும் வெற்றி, புதுமணை, வீடு, வசதி மேம்பாடு
சனி : 6 வெற்றி, எதிரிகள் தொல்லை நீங்கும், லாபம்
ராகு : 11 பெண்னால் நன்மை, லாபம், விவசாயத்தில் லாபம்
கேது : 5 எதிரி தொல்லை, நோய், குழந்தைகள் தொல்லை
|
இவ்வருடம் யோகத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது, நன்றாக யோசித்து எடுக்கும் முடிவுகளால் வாழ்கையில் பெரும்மாற்றமும் நிரந்தர வருவாய், நிம்மதி ஏற்படும்
7ஆம் பார்வை குருவால் குடும்ப உறவு மேலும் வலுப்பெறும். பூசல் நீங்கி தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மணைவி வழியாக சில நன்மைகள் வரும். குழந்தை பேறு உண்டு. குழந்தைபேறு மருத்துவம் பலன் அளிக்கும் காலம் இது.
குடும்பத்தினரின் அன்புகூடும், உடன்பிறப்புகளிடத்தில் உறவு மேம்பட்டு கசப்புகள் நீங்கும். இல்லத்ததில் சுபநிகழ்சிகளில் நடைபெறும்
தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். கன்னிகள் மனதிற்கு பிடித்த வாழ்வு மலரும். விதவை திருமணம், மறுமணம் வெற்றிபெறும் புதுவாழ்வு மலரும்
குரு 11ல் பணவரவு தங்குதடையின்றி இருக்கும், தங்களின் சமூக மதிப்பு மேலும் உயரும். வராது என கைவிட்ட பாக்கி வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும் ஆயினும் எழுதிவாங்கிக்கொள்ளவும் வாய்பேச்சில் நம்பவேண்டாம்.
எதிரிகள் தொல்லை குறையும், மனம் புனபடும்படி பேசியவர்கள் பாராட்டுவார்கள், போட்டிகளில் வெற்றிபெற்று புகழ்வந்து சேரும், திறமையுடன்செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.
புதிய வீடு கட்ட துவங்கினால் விரைவில் முடியும், தடைபட்ட கட்டிட வேலைகள் முடிந்து குடிபுகுவீர்கள். வங்கி கடன் தேவையானளவு கிடைக்கும்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆயினும் வீன் வழுக்குகள் வெற்றியளிக்காது
வணிகம் லாபத்தை தரும், ஏற்றுமதி, கூட்டுத்தொழில் கைகொடுக்கும். புதியவியாபார முயற்சிகள் வெற்றியை தரும்
மாணவர்களுக்கு மிகவும் உகந்த காலம். எதிர்பார்க்கும் மேற்படிப்பு அமையும். குருவின் கருனையால் கலைகள் வளரும். பாராட்டுகள் உண்டு வக்கிரகாலத்தில் தீயநட்புகள் தங்களை நாடிவரும் மிகுந்த எச்சரிக்கை தேவை ! பின்னாளில் தொல்லை வரும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் காலம்முழுவதும் துக்கப்படவேண்டும்.
அருமையான காலம் இது சாதகமான சூழல் என்பதால் தவறுதல் செய்யாதீர் ! வருட முடிவில் சற்று மந்தமாக இருக்கும்
இவ்வருடம் 75% நன்மை உண்டு. எச்சரிக்கையுடன் இன்புறுங்கள்
பரிகாரம் |
 |
|
பரிகாரங்களை
வழிபாடு மூலமாகவும், தர்மத்தின் மூலமாகவும் செய்யவதே நல்லது குறிப்பாக வசதியற்ற கோவிலுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவிசெய்வதும் தான் மிக சிறந்த வழிபாடாகும் இதன் மூலமாக நவக்கிரகங்களின் தாக்கம் குறைந்து வரும் ஆண்டு சிறப்பாக அமையும் என நம்பிக்கை கொள்வோமாக.
கடன்வாங்கியோ அல்லது வருவாய்க்கு ஒவ்வாத வகையில் பரிகாரம் செய்யவேண்டாம்
வழிபாட்டால் தங்களின் அன்றாட கடமைகள் பாதிக்ககூடாது என்பதே எனது நோக்கம் ஆகும் எனவே வழிபாட்டிற்காக வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து கோவிலுக்கு செல்வதை தவிர்க்கவும்
குரு :
மூக்கடலை 2 கிலோ, மஞ்சள் துணி(புடவை அல்லது சட்டை)யை ஆனாதை இல்லத்திற்கு வியாழக்கிழமைகளில் அல்லது ஜென்ம நட்சத்திரத்தில் தானம் செய்யவும். தினமும் குளித்தவுடன் குரு காயத்திரியை 21முறை மனிதில் ஜபிக்கவும்
வியாழக்கிழமைகளில் குளத்துடன் கூடிய ஆகம விதிப்படி கட்டப்பட்ட சிவன்கோவில் சென்று வழிபடவும்
குரு காயத்ரி :
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||
குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாதாம் தஷிணாமூர்த்தயே நம;
சனி :
ஆதரவற்றோர் இல்லத்திற்கு சனிக்கிழமைகளில் சென்று எள், அரிசி தானம் செய்யலாம்
கருப்பு நிற போர்வை, துணி தானம் செய்யலாம்
சனிக்கிழமைகளில் எருமைக்கு அரிசி தவிடு, வெல்லம் கலந்து தரவும்
சனிக்கிழமைகளில் குளத்துடன் கூடிய ஆகம விதிப்படி கட்டப்பட்ட சிவன்கோவில் அல்லது ஆஞ்சநேயர் கோவில் சென்று வழிபடவும்
சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு பின்சனி காயத்திரியை 21முறை மனிதில் ஜபிக்கவும்
சனி காயத்ரி:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
ராகு, கேது
பாவ புன்யாதிபதிகளான ராகு, கேதுவிற்கு பரிகாரமாக முதியோர் இல்லத்திற்கு ஞாயிற்று கிழமையில் செனறு அரிசி, உளுந்து தானம் செய்யலாம். சாம்பல் நிறம் அல்லது பலநிற துணி, சட்டை தானம் செய்யலாம். வசதியற்ற கிராமத்து அம்மன், விநாயகர் கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணை வாங்கி தரலாம் அல்லது கோவிலின் மின்சார கட்டணத்தை செலுத்தலாம்
ராகு காலத்தில் விநாயகர், துர்கை காயத்திரியை 21முறை மனிதில் ஜபிக்கவும்
கணபதி மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா. .
கணபதி காயத்திரி :
தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ
தன்னோ தந்தி ப்ரயோதயாத்.
துர்கை காயத்ரி :
கார்தாயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி |
தந்நோ துர்க : ப்ரசோதயாத்||
ராகு காயத்ரி:
நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||
கேது காயத்ரி:
அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||
|
|
|