குரு பெயர்ச்சி மற்றும் 2010 ஆண்டு பலன்
Guru Transist and 2010 year Prediction
|
எதிர்காலவியல்(Astrological) கணிப்பு என்கிற இந்த கட்டுரையில் சந்திரன் (தங்களின் நட்சத்திரம் உள்ள இராசி) நின்ற ராசியை வைத்து 2010 ஆண்டு குரு, சனி, ராகு, கேது கோள்களின் வான் நிலைகள் புள்ளிவிபரம்(Planets Ephemeris Data) கொண்டு திருக்கணித முறைப்படி நிராயண (Sidereal)அடிப்படையில் கனித்துள்ளேன்.
எதிர்காலவியலில் பலன்கள் வெறும் இராசி சந்திரன்- கோள் நிலை (கோசாரம்)அடிப்படையில் மட்டும் முழுமையாக கனிக்க இயலாது , பிறப்பு இலக்னம் (Ascendant) கோள்நிலை(ஜனன ஜாதகம்), நடப்பு(விம்ஷோத்ரி) தசை – புக்தி- அந்தாரத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து ஒப்புநோக்கி பின்னரே முழுமையாக கனிக்க இயலும். அப்படியே கனித்தாலும் முற்பிறவியின் செயல்கள்(கர்மா), மூதாதையரின் நன்மை தீமைகள்(பாவ புன்யம்) ஆகியனவும் மணித வாழ்வினை நிர்ணயிக்கிறது என்கிறார் அகத்திய மாமுனிவர்.
நன்மைகளை எதிர்கொள்ளும் நாம் தீமைகள் வராமல் தடுக்க இறைவழிபாடு மற்றும் சரியான அறவழி (தான தர்மம்)களை நாடுவதே நன்று.
குரு சஞ்சாரம்:
குரு பகவான் சூரியனை 360 பாகை சுற்றிவர 11.86 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார் இதில் ஒரு ராசியில் (30 பாகை) சுமார் ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்து தகுந்த பலன்களை தருகிறார். சந்திரன் நின்ற ராசியில் இருந்து குரு 2, 5, 7, 9, 11பார்க்கும் காலத்தில் மிகவும் நற்பலனையும், மாறாக 1, 3, 4, 6, 8, 10, 12 இடங்களில் குரு இருக்கும் காலங்களில் சற்று பின்னடைவும் ஏற்படும்.
20 டிசம்பர் 2009 அன்று அதிகாலை 00:15 மணி அளவில் குரு மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு செல்கிறார் (300 பாகைக்கு மேல் 330 பாகை உள்) அங்கு 03.05.2010 வரை வசிக்கிறார் பின்னர் மீன ராசியில் பிரவேசிக்கிறார்.
மீன ராசியில் உள்ள குரு 24.07.2010 முதல் வக்கிரம் அடைகிறார். 19.11.2010தேதி அன்று வக்கிர நிலையில் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார், மீன்டும் நேர்கதியில் 07.12.2010 மீன ராசியில் பிரவேசிக்கிறார். அதுமுதல் 9.5.2011 வரை மீன ராசியிலும் பின்னர் மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்.
2010ஆம் ஆண்டு குரு கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிரவேசிப்பதால் ஆண்டின் முற்பகுதியின் பலனும் பிற்பகுதியின் பலனும் நேர்மாறாக இருக்கும். இடையில் குருவின் மொத்த வக்கிர காலம் சுமார் 120 நாட்கள் ஆகும்.
குரு கிரக நிலைகள்(2009-2010) நிராயண முறை (லஹரி - சித்ரபட்சம், மாறும் அயனாம்சம்)
தேதி |
ராசி |
நட்சத்திரம் |
நிலை |
நிராயண பாகை |
வாக்கிய முறை |
20.12.2009 |
கும்பம் |
அவிட்டம் |
நேர் |
300 03 |
15.12.2009 |
22.01.2010 |
கும்பம் |
சதையம் |
நேர் |
306 53 |
19.1.2010 |
19.03.2010 |
கும்பம் |
பூரட்டாதி |
நேர் |
320 12 |
17.3.2010 |
03.05.2010 |
மீனம் |
பூரட்டாதி |
நேர் |
330 11 |
02.5.2010 |
20.05.2010 |
மீனம் |
உத்திரட்டாதி |
நேர் |
333 20 |
21.5.2010 |
24.07.2010 |
மீனம் |
உத்திரட்டாதி |
வக்கிரம் |
339 24 |
15.7.2010 |
30.09.2010 |
மீனம் |
பூரட்டாதி |
வக்கிரம் |
333 15 |
07.11.2010 |
19.11.2010 |
கும்பம் |
பூரட்டாதி |
நேர் |
329 29 |
11.11.2010 |
07.12.2010 |
மீனம் |
பூரட்டாதி |
நேர் |
330 03 |
21.11.2010 |
07.01.2011 |
மீனம் |
உத்திரட்டாதி |
நேர் |
333 23 |
03.01.2011 |
14.03.2011 |
மீனம் |
ரேவதி |
நேர் |
346 46 |
14.03.2011 |
09.05.2011 |
மேஷம் |
அஸ்வினி |
நேர் |
000 09 |
|
v வாக்கிய முறை தேதிகள் அறிந்துக்கொள்ள மட்டுமே அன்றி குரு பலன் கணிக்க அல்ல.
v வாக்கிய முறைப்படித்தான் திருக்கோவில்களில் குருபெயர்ச்சி வழிபாடுகள் நடைபெறும்.
2010ல் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலைகள் (சந்திர ராசியில் இருந்து) மற்றும் சுப பார்வைகள்
சனி தான் நின்ற இராசியிலிருந்து 3,7,10 இடங்களை சுபமாக நோக்குவார்
ராகு, கேது தான் நின்ற இராசியிலிருந்து 3,7,11 இடங்களை சுபமாக நோக்குவார்கள்
ராசி |
குரு கிரகம்
20.12.2009 முதல்
03.05.2010 வரை |
குரு கிரகம்
03.05.2010 முதல்
31.12.2010 வரை |
சனி
கிரகம் |
ராகு
புள்ளி |
கேது
புள்ளி |
ஆண்டு
பலன்
5க்கு |
மேஷம் |
11 சுமாரான நன்மை |
12 தீமை |
06 |
09 |
03 |
4 |
ரிஷபம் |
10 தீமை |
11 சுமாரான நன்மை |
05 |
08 |
02 |
1 |
மிதுனம் |
09 மிகுந்த நன்மை |
10 தீமை |
04 |
07 |
01 |
1 |
கடகம் |
08 கடும் தீமை |
09 மிகுந்த நன்மை |
03 |
06 |
12 |
3 |
சிம்மம் |
07 மிகுந்த நன்மை |
08 கடும் தீமை |
02 |
05 |
11 |
2 |
கன்னி |
06 தீமை |
07 மிகுந்த நன்மை |
01 |
04 |
10 |
1 |
துலாம் |
05 மிகுந்த நன்மை |
06 தீமை |
12 |
03 |
09 |
3 |
விருச்சிகம் |
04 தீமை |
05 மிகுந்த நன்மை |
11 |
02 |
08 |
2 |
தனூர் |
03 தீமை |
04 தீமை |
10 |
01 |
07 |
0 |
மகரம் |
02 நன்மை |
03 தீமை |
09 |
12 |
06 |
3 |
கும்பம் |
01 தீமை, நன்மை |
02 நன்மை |
08 |
11 |
05 |
2.5 |
மீனம் |
12 தீமை |
01 தீமை, நன்மை |
07 |
10 |
04 |
0.5 |
|