கர்ப காலத்தில் வழிபாடு | Pregnant women worship planets and hindu god | ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

www.prohithar.com

கர்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள் மற்றும் கிரகங்கள் குறித்து பிரஹத்ஜாதகம் எனும் மூலநூலில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் தான் கர்பம் அடைந்துள்ளோம் என அறிந்தது முதலாக பிரசவகாலம் வரை பத்து மாதங்கள் தோறும் ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திற்கு உரிய கிரகங்களையும் அதன் அதிதெய்வங்களை வழிபட்டு நல்ல பிரசவமாக அமையவும், அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசு உருவாகி தன்வம்சத்தை விருத்திசெய்யும் குழந்தை பிறக்க இறைவனை பிராத்தனை செய்தல் நன்று. தலைப்பிரசவம் மற்றும் அடுத்த குழந்தையாக இருப்பினும் இந்த "கர்ப மாத தெய்வங்களை" வழிபடுதல் நல்லது.

எட்டாம் மாதத்திற்கு சாந்தி முகூர்த்த லக்னாதிபதி (தலைப்பிரசவத்திற்கு மட்டும்)யை வணங்கவேண்டும். சாந்திமுகூர்த்த லக்னாதிபதி தெரியாத நிலையில் சுக்கிரனையும், சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீலக்ஷ்மியை வணங்குதல் நன்று. இரண்டாம் பிரசவத்திற்கு சுக்கிரன் மற்றும் கர்பினியின் ஜன்ம லக்னாதிபதியை வழிபடவேண்டும்.

மூன்றாம் மாதத்திற்குரிய பிரம்மாவிற்கு தனியாக கோவில் இல்லை என்பதால் பிரம்மாவிற்கு பதிலாக காயத்ரி, வஸ்வகர்மா அல்லது தக்ஷ்ணாமூர்த்தியை வணங்கவேண்டும். அதுபோலவே ஆறாம் மாதத்திற்குரிய எமனுக்கு பதிலாக சிவனை வழிபடவேண்டும்.

தர்மம் இல்லாத வழிபாடு என்றுமே பலன்தராது. எனவே ஒவ்வொரு கர்ப மாதமும் கர்பினியின் ஜென்ம நட்சத்திரத்திரம் அல்லது கணவரின் ஜன்ம நட்சத்திரத்திம் உள்ள நாளில் ஆதரவற்ற இல்லங்களுக்கு கீழ்கண்ட வரிசைப்படி தங்களின் வசதிக்குட்பட்டு தானம் செய்யவும்

1.மொச்சை, 2.துவரை, 3.மூக்குகடலை, 4.கோதுமை, 5.அரிசி, 6.நல்லெண்ணெய்,7. பயித்தம் பருப்பு, 8.மொச்சை, 9.அரிசி, 10.கோதுமை.

பூமுடிப்பு (பூமுடித்தல்), வளைகாப்பு, சீமந்தம் அன்று அல்லது ஏழாவது மாதத்தில் தங்களீன் பூர்வீக கிராமத்தில் வறுமையில் வாடும் தாய்மார்களின் ஏழை பச்சிளம் குழந்தைக்கு பால்டப்பாவாங்கி தரவும்.

குலதெய்வம் வழிபாடு கர்பகாலத்தில் மிகமுக்கியமானதாகும், குழந்தையின் முதல் பெயரும், குலதெய்வத்தின் பெயரையே சூட்டவேண்டும்.

தானங்களை தங்களின் வசிப்பிடத்தருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தங்கள் கைகளால் தானம் செய்யவும்.

முதல் மாதம் சுக்கிரன், இரண்டாம் மாதம் செவ்வாய், மூன்றாம் மாதம் குரு, நான்காம் மாதம் சூரியன், ஐந்தாம் மாதம் சந்திரன், ஆறாம் மாதம் சனி, ஏழாம் மாதம் புதன், எட்டாம் மாதம் சுக்கிரன், ஒன்பதாம் மாதம் சந்திரன், பத்தாம் மாதம் சூரியன் என கிரகங்களையும் அதன் அதிதெய்வங்களையும் வழிபடவும்.

கர்ப காலத்தில் வழிபாடு | Pregnant women worship planets and hindu god | ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Pregnant women worship planets and hindu god, Womb to Pregnancy delivery time prayer


Seemantham poojai list சிமந்தம் பூஜை பொருள்பட்டியல்

சீமந்தம் வளைகாப்பு கதம்ப சாதம் பட்டியல் seemantham, valikappu sadam items, cook, kabisthalam, kumbakonam, சமையல் கலைஞர்

Subramaniyam Iyer, kabisthalam, kumbakonam, 94873 13167, 82202 38222

Extra image

| Tamil Male & female Baby Names Link - ஆண்-பெண் குழந்தை பெயர்கள் |
http://www.prohithar.com/babynames/index.html

Pregnant women worship planets, கர்ப கலத்தில் நவக்கிரக வழிபாடு, சீமந்தம், பூமுடிப்பு, வளைகாப்பு, பிரசவம், தலைப்பிரசவம், பெண் குழந்தை, சீர்வரிசை

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்- பாலு சரவண சர்மா
Tambaram Astrologer - Tambaram Prohithar
Cell: 98403 69677 (Contact Time 14 Hrs IST to 19 Hrs IST)
www.thanigaipanchangam.com

 © முழுகாப்புரிமை 2015