Prohithar Balu Saravanan

No 9, 4th Street, Kalyanagar, Tambaram West, Chenai 600 045, India. TeleFax 91 44 2226 1742, Cell: 91 98403 69677

Email: prohithar@yahoo.com   www.prohithar.com

முகப்பு பக்கம்


 

திருமண மந்திரங்களின் பொருள்

 

  மாங்கல்ய மந்திரம்

மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவித ஹேதுநா |

கண்டே பத்நாமி ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||

பொருள் : இந்த தாலி கயிறு, நான் வாழ்வதற்க்கு ஏதுவானது. இந்த மாங்கல்ய நூலை உனது கழுத்தில் கட்டுகிறேன். திருமகளே நீ நூறு ஆண்டுகள் வாழ்வாயாக !

 

பாணிக்ரஹணம் (கரம் பிடித்தல்)

க்ருபணாமி தே ஸூப்ரஜாஸ்த்வாய ஹஸ்தம்

மயா பத்யா ஜரதஷ்டிர் யதாSஸ: | பகோ அர்யமா

ஸவிதா புரந்திர் மஹ்யம் த்வாSதுர் கார்பத்யாய தேவா:||

பொருள் : நீ நல்லபிள்ளைகளை பெற்று முதுமை வரை என்னுடன் வாழ்வதற்காக உன் கையை நான் பிடிக்கிறேன். பகன், அர்யமா, ஸவிதா, இந்திரன் முதலான தேவர்கள் இல்ல தலைவியாக இருக்கும் பொருட்டு எனக்கு உன்னை அளித்துள்ளார்கள்

தேஹ பூர்வே ஜநாஸோ யத்ரபூர்வஹோ ஹிதா: |

மூர்த்தந்வாந் யத்ர ஸௌப்ரவ: பூர்வோ தேவேப்ய ஆதப்த ||

பொருள் : முன்னர் இறை இல்லர வாழ்வில் பங்குபெற்ற பகன் முதலான தேவர்கள் மற்றும் அக்னி தேவர்களில் யார் தலைமையானவரோ அவர் எனக்கு உன்னை அர்பணித்தார்

ஸரஸ்வதி ப்ரேதமவ ஸூபகே வாஜிநீவதி |

தாம் த்வா விஸ்வஸ்ய பூதஸ்ய ப்ரகாயாமஸ்யக்ரதா: ||

 பொருள் : நல்ல பாக்யமுள்ளவர்களும், அன்னம் அல்லது ஸ்தோத்திரம் நிரம்பியவளுமான சரஸ்வதி தேவியே ! நன்றாக ரட்சிக்க வேண்டும். உன்னை நாங்கள் உலக பிராணிகள் எதிரில் நன்றாக பாடி வழிபாடு செய்கிறோம். 

ய ஏதி ப்ரதிஸஸ் ஸர்வா திஸோSநு பவமாந: |

ஹிரண்ய ஹஸ்த ஐரம்மஸ் ஸ த்வா மந்மநஸம் க்ருணோது ||

பொருள் : சுத்தப்படுத்துகிற எந்தவாயு(தேவன்) எல்லாமூல திசைகளையும் அடைகிறாரோ, கைகளில் தங்கத்தை ஏந்தியிருப்பவரும், அக்னியை சேர்ந்தவருமான அந்த வாயு தேவன் உன்னை என்னிடம் மனம் பொருந்தியவளாக செய்வாராக !

 

உன்னதமான பெண்ணின் தாமரை மலர் போல் குவிந்த வலதுகையை பற்றி (முதன் முறையாக ஒரு ஆண் ஒரு பெண்ணை தொடுவது) அக்னியை வலம் வருதல்

 

v      சப்தரிஷிகள் (வாழ்வியல் கோட்பாடுகளை அளித்தவர்கள்)

அகத்தியர், அங்கீரசர், கவுதமர், காசிபர், புலத்தியர், மார்க்கண்டேயர், வசிட்டர்

 

v      16 பேறுகள் (இதை வேண்டி வாழ்த்துக்கள் கோருதல்)

1 புகழ் , 2 - கல்வி  3 - வலிமை  4 - வெற்றி  5 - நன்மக்கள்  6 - பொன்  7 - நெல் 

8 நல்வினை 9 - நுகர்ச்சி 10 - அறிவு  11 - அழகு  12 - பொறுமை  13 - இளமை 

14 - துணிவு  15 - ஆரோக்கியம்   16 - நீண்ட ஆயுள்

 

v      நவமணிகள் (விலைமதிப்பற்ற செல்வங்களை அறவழி-பொருளியல் மூலம் ஈட்டுதல்)

கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்.

 

v      நவநதிகள் (கலசத்தில் வரிக்கப்படும் நதிகள்)

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு, குமரி மற்றும் மூதாதையர் வாழ்ந்த கிராமத்தின் கோயில் குளத்துநீர்

 

v      திருமணத்திற்கான கடவுள்கள்

விஷ்ணு, சோமன், கந்தர்வன், அக்னி, காமன், காமினி

 

சப்தபதி (ஏழு அடிகள்), அம்மி மிதித்து மெட்டி இடுதல்

 

.....மேலும் மலரும்

 


Website by Balu. Saravana Sarma

email : prohithar@yahoo.com

வாழ்க வளமுடன்