my Club, Chennai, India, 2012da14, 15.2.2013 Earth Attack

வானியல் தொடர்பான உலகத்தின் அதிகாரபூர்வ அமைப்பான "சர்வதேச வானியல் சம்மேளனம்" ( International Astronomical Union IAU ) தாம்பரம் வானியல் கழகத்தை அங்கீகரித்து அதனின் இணையத்தில் குழுநடவடிக்கை பகுதியில் வெளியிட்டு எம்மை கௌரவப்படுத்தியுள்ளது என்பதை இங்கு பணிவுடன் அறிவிக்கிறோம்
https://directory.iau.org/directory/456


End Time of solar Eclipse, Mercury Transit,  9th May 2016, Tambaram Astronomy Club, Chennai, India

சூரிய கிரகணம் 9.3.2016 புகைப்பட தொகுப்பு
https://goo.gl/photos/yWVf8RPtgPngY87G9
இன்று காலை நிகழ்ந்த சூரிய கிரகணத்தை கான காலை 5:45 மணிக்கே தயாராக சிலர் வந்திருந்தனர்.
மேக மூட்டம் காரணமாக கிரகண முடிவின் சிலநிமிடங்கள் மட்டுமே காண முடிந்தது

Solar Eclipse 2016 march 9, Tambaram Astronomy Club, Chennai, India, Mercury Transit

சென்னையில் 9.3.2016 அன்று தெரியும் சூரிய கிரகணம் (Solar Eclipse) இப்படித்தான் இருக்கும்

Solar Eclipse - Tambaram Astronomy Club- Mercury Transit 2016, Chennai, Tambaram Astronomy Club, India, IAU, NASA


Jupiter Opposition - குரு கிரகம் எதிர்நிலை - புகைப்பட தொகுப்பு
https://goo.gl/photos/C3BBFamHDY8aESEv6
8.3.2016 அன்று இரவு சூரியனுக்கு எதிர்நிலையில் குருகிரகம் வருகை தரும் நிகழ்வை காண தாம்பரம் வானவியல் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மதுரையிலுருந்து வாஸ்து திரு. நவமணி, வல்லக்கோட்டையிலுருந்து பிரஜாபதி என தொலைவில் இருந்தும் உள்ளூரிலுருந்தும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் வருகை தந்து ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்
அது தொடர்பான படத்தொகுப்பு
https://goo.gl/photos/C3BBFamHDY8aESEv6

Solar Eclipse 2016 march 9, Tambaram Astronomy Club, Chennai, India, Mercury Transit

வானத்தை காண வாருங்கள்
குறிப்பு:  என்னால் நிகழ்ச்சி மட்டுமே ஏற்பாடு செய்ய முடியும் மற்றபடி குடிநீர், சிற்றுண்டி ஏற்பாடு செய்ய இயலாத சூழல் - மன்னிக்கவும். எனவே காண வருபவர்கள் தவறாமல் குடிக்க நீர் கொண்டு வரவும். பாலு சரவண சர்மா - 9840369677

Solar eclipse, Mercury Transit 2016 Chennai

mercury transit 2016 chennai, india, astronomy club

Mahamaham Astronomical Phonemena மகாமகம் ஓர் வானியல் நிகழ்வு

mahamaham, magamagam, 2016, kumbakonam, மகா மகம், கும்பகோணம், தஞ்சாவூர், நீராடல், குளம், தீர்த்தவாரி, துன்முகி பஞ்சாங்கம், Tambaram Prohithar, Sri thanigai Panchangam

மகாமகம் என்பது புவிமைய கோட்பாட்டின்படி சூரியனுக்கு எதிர் நிலையில் நிலவு, வியாழன் கோள், மகம் (Regulus)நட்சத்திரம் வரும் வானியல் நிகழ்வாகும்
மகம் நட்சத்திரம் புவிமையக்கோட்பாட்டின் படி Longitude ல் மட்டுமே எதிர் நிலையில் வரும்.
சூரியனுக்கு எதிர்நிலையில் நிலவு Longitude ல் வருவது பவுர்ணமி, Longitude & latitudeல் வருவது சந்திர கிரகணம் நிகழ்வாகும்

சூரியனுக்கு எதிர்நிலையில் குரு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் Longitude ல் வரும்
Longitude & latitudeல் வரும் பொழுது குரு கோளில் இருந்து சூரியனை பார்த்தால் பூமி சூரிய விட்டத்தை கரும் புள்ளி போல் கடக்கும் (இது சூரியனை புதன் கடப்பது போல்தோன்றும்)
சூரியன் பூமி குரு ஆகிய மூன்றும் 10.01.2026 ஆம் ஆண்டு நேர்கோட்டில் வரும்

மகாமகம் என்பது வானவியலில் மிகமுக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும் சூரியன் - பூமி - நிலவு - குரு - மகம் ஆகிய 5 வானியல் பொருட்களும் நேர்கோட்டில் வருவது பலாயிரம் கோடி ஆண்டுகளாகும். ஏனெனில் சூரிய - பூமி பாதையில் இருந்து மகம்(HR 3982) Declination +9° 13' 16" நிலையில் உள்ளது இது -18.64" அளவிற்கு வருட மாற்றம் உள்ளது, இதன் ஆண்டு சலனம் Anual Variation & Proper motion மிககுறைவாக உள்ளதால் பலாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே நிஜமான மகாமகம் நிகழ வாய்ப்புள்ளது. இதனிடையில் அண்டவெளி சுழற்சி, பிரபஞ்ச விரிவு ஆகிய வற்றால் இதுபோன்ற வானியல் நிகழ்வு நடைபெறும் என்பதை உறுதியிட்டு கூறமுடியாது

இப்பொழுது மகாமகம் கும்ப இராசியில் சூரியன் நிற்க எதிர் நிலையில் சிம்ம இராசி கூட்டத்தில் மகம் நட்சத்திரம் அருகில் முழுநிலவும், குரு இருக்க வரும் காலமே மகாமகம் என அழைக்கப்படுகிறது. இருப்பினும் வானவியல் கூற்றுப்படி குரு, நிலவு, மகம் நட்சத்திரம் ஆகிய வெவ்வேறு நாட்களில் சூரியனுக்கு எதிர்நிலையில் வருகிறது.

சூரியனுக்கு எதிர்நிலையில் நிலவுவரின் அது பவுர்ணமி என்று அழைக்கப்படுவது போல் குரு எதிர்நிலையில் வரும் காலமும் "குரு பவுர்ணமி" என்று அழைக்கலாம். இந்த நாளில் குருவின் முழுவிட்டமும் தெளிவாகவும் அதன் துணைக்கோள்(சந்திரன்கள்) அழகாகவும் தெரியும். இதை சக்திவாய்ந்த பைனாகுலர், வானியல் தொலைநோக்கிகளில் காணலாம்.

நிலவு வியாழன் கோள் , மகம் நட்சத்திரத்தை மறைத்தால் அது Lunar Occultation என அழைக்கப்படும். இந்த நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். இது குறித்து அறியகீழ்கண்ட இணைப்பை பார்வையிடவும்.
http://www.lunar-occultations.com/iota/bstar/bstar.htm

குறிப்பு: பாமரமக்கள் புரிந்தக்கொள்வதற்கு எளிதாக Right ascension and Declination ஆகியன Longitude & latitude என தரப்பட்டுள்ளது

கூடுதல் இணைப்புகள்:
மகாமகம் விளக்க படம் 1
மகாமகம் விளக்க படம் 2
மகாமகம் விளக்க படம் 3
மகாமகம் விளக்க படம் 4

மகாமகம் jupiter Opposition 8th march 2016


Mercury Transit  Monday 9th May 2016, Chennai, Tambaram Astronomy Club, India

Old Events
Venus Transit 2012
Penumbral Lunar Eclipse 28.11.2012


 

interview on exoplanet-extrasolar system வேற்றுக்கிரகத்தில் குடியேற்றம், ப்ளூட்டோ நிலை, சர்வதேச வானியல் சம்மேளனம் குறித்த புதுயுகம் தொலைக்காட்சி பேட்டி 24.8.2015

பேட்டி ஒலி வடிவில்:http://prohithar.com/tac/MP3-new-earth.mp3

Zero Shadow - Solar Zenith Day  சூரியன் உச்சிக்கு வரும் நாள் Zenith Day - Zero Shadow Day என்று அழைக்கப்படும். இந்த நாள் குறித்து விளக்கம். சென்னையில் சூரியன் உச்சிக்கு வந்த 18.8.2015 அன்று தாம்பரம் ஸ்ரீரமண வித்யாலாயாபள்ளியில் மாணவர்களுக்கு சூரிய உச்சிக்கு வந்த காலத்தில் நிஜமான செயல்முறை விளக்கம் தரப்பட்டது
நன்றி: ஸ்ரீரமண வித்யாலயா பள்ளி

 

இது தொடர்பான படங்கள்
https://www.flickr.com/photos/prohithar/sets/72157655194508493


4.4.2015 Total Lunar Eclipse - Duration and Event Time

 

 

Duration of eclipse, Lunar Eclipse, Chennai Tambaram Astronomy Club, Thanigai Panchangam

வியாழன் கோள் எதிர்நிலை 6.2.2015 (Jupiter at Opposition)

Jupiter at Opposition, 2016, Tambaram Astronomy Club, Chennai

சூரியனுக்கு எதிர்நிலையில் இருக்கும் வியாழன் கோள் பிரகாசமாக முழுவிட்டத்துடனும், அதன் நிலவுகளுடனும் அழகாக தோன்றும் வானியல் நிகழ்வை தொலைநோக்கி மூலமாக மாணவர்கள் காணும் வகையில் தாம்பரம் வானியல் கழகம் சார்பாக 2015 பிப்ரவரி 6ம் தேதி முதல் ஒருவாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவில் மாணவர்கள் தொலைநோக்கிமூலம் காணும் காட்சி இணைக்கப்பட்டுள்ளது
அதிக தரமான படம்:
http://www.prohithar.com/tac/jupiter_opp_2015_01.jpg
http://www.prohithar.com/tac/jupiter_opp_2015_02.jpg

மீண்டும் 8, மார்ச் 2016 செவ்வாய் அன்று மாலை 4:27 மணி அளவில் சூரியன்-பூமி-குரு கிரகம் நேர்கோட்டில் வரும் அன்று மாலை சூரிய அஸ்தமனம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை வானில் குரு கிரகத்தினை முழுவிட்டத்துடன் கண்டு ரசிக்கலாம்
(Jupiter at opposition Tue, 08 Mar 2016 at 16:27 IST)

jupiter oppsosition 8th march 2016, Tambaram astronomy Club, Chennai, India

Tambaram Astronomy Club - Balu Saravana Sarma
http://www.prohithar.com/tac/index.php


திருவாதிரை நட்சத்திரம் (betelgeuse) "ஆருத்திரா தரிசனம்"
Alpha Orionis ( α Orionis or α Ori)

இந்திய கலாசாரத்தின் ஓர்அங்கமான வானத்தை காண்பதும், நட்சத்திரத்தின் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதும் தொன்றுதொட்டு வருகிறது. குறிப்பாக ஓரியன் மண்டலத்தில் உள்ள திருவாதிரை நட்சத்திரம் காண்பதை ஒரு இறைநம்பிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்தாண்டு சூரியன் தனூர் மாதத்தில் நிற்கவும், முழுநிலவின் அருகில் திருவாதிரை வரும் நாளில் விண்ணை படம் எடுத்து இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்தநாளிலாவது பொதுமக்கள் வானில் உள்ள நட்சத்திரங்களை அறிந்து வானியலில் ஆர்வம் காட்ட துவங்கவேண்டும். அப்பொழுதுதான் இளைஞர்கள் தன்னார்வ வானியலாளராக உருவெடுத்து சாதனைகளை செய்ய இயலும்.

மேலும் படங்கள்: https://plus.google.com/photos/112292199305867435143/albums/6101190260047314273

திருவாதிரை நட்சத்திரம் (betelgeuse) "ஆருத்தரா தரிசனம்" Tambaram Astronomy Club, Arudra Darsisanam 2015

அடுத்து இந்த நிகழ்வு 26.12.2015 அன்று சூரிய உதயம் முன்னர் அதிகாலையில் வானில் காணலாம்.


2015 ம் வருட கிரகணங்கள் Eclipse 2015 Chennai

இந்த ஆண்டு 4.4.2015 முழு சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக சென்னையில் தோன்றும்

28.9.2015 முழுசந்திர கிரகணம் அன்று நிஜநிழல் கிரகணம் முடிந்து புறநிழல் கிரகணமாக மட்டும் சென்னையில் தெரியும். வழக்கத்தைவிட ஒளி மங்கலாக கிரகணம் முடியும் வரை நிலவு தோன்றும்.

2015 Eclipse Chennai, Tambaram Astronomy Club, IAU, சென்னை, கிரகணம், 2015, 2016

4 april 2015 Lunar Eclipse Chennai, Tamil Nadu, India, Tambaram Astronomy Club, முழு சந்திர கிரகணம் 4 ஏப்ரல் 2015, தாம்பரம், சென்னை, தமிழகம், இந்தியா, Chennai Astronomy Club

முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம் 8.10.2014 புதன் அன்று மாலை 5:54 முதல் இரவு 7:05 வரை தெரிந்தது.(6:05 வரை நிஜ நிழல் பின்னர் புறநிழல்)

முழுசந்திர கிரகணம் நிகழ்ந்த பொழுது தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது

astronamy

மேலும் நிகழ்ச்சி தொடர்பான படங்கள்...பெரிய நிலா - Super Moon (10 augest 2014)

 10 ஆகஸ்ட் 2014 ஞாயிறு அன்று இரவு “முழுநிலவு” வழக்கத்தை காட்டிலும் சுமார்14% பெரியதாகவும் 30% மிகப்பிரகாசமாகவும் தோன்றும். இதை உலகம் முழுவதும் உள்ளவர்கள் வெறும் கண்களால் காணலாம்

 பூமியை சந்திரன் நீள்வட்டத்தில் சுற்றுவதன் காரணமாக அண்மை நிலை (Perigee) மற்றும் தொலைவு நிலை (Apogee) ஏற்படுகிறது.

 10.8.2014 ஞாயிறு அன்று இரவு 10:23 மணி அளவில் பூமிக்கு அருகில் 356947 கி.மி தொலைவில் நிலவு “அண்மைநிலை”(Perigee)யில் 33 மினிட் விட்டத்தில் பெரியதாக தோன்றும்.

 இரவு 11:39 மணி அளவில் பூமிக்கு 356895 கி.மி தொலைவில் சந்திரன் இருக்கும் பொழுது சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வருகிறது. புவிமைய கோட்பாட்டின்படி சூரியனுக்கு 180 பாகையில் எதிர்நிலை (Opposition) சந்திரன்வரும் காலத்தில் பெரியநிலா (Super Moon) எனும் வகையில் பௌர்ணமி நிகழ்கிறது.

 சில வருடங்களுக்கு ஒரு முறைமட்டுமே அரிதாக சந்திரன் அண்மை நிலையில் பௌர்ணமி - பெரிய நிலா (Super Moon) நிகழ்கிறது.

 பூமிக்கு அருகில் சந்திரன் வருவது மாதாந்திர நிகழ்வு இதனால் அச்சப்படும் வகையில் இயற்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இருக்காது.

குறிப்பு: தாம்பரத்தில் அன்று மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக தொலைநோக்கியால் நிலவை படம் எடுக்க இயலவில்லை


Solar Day Event - Inerview - Puthuyugam TV 22.6.2014
சூரிய தினம் சிறப்பு பேட்டி - புதுயுகம் தொலைக்காட்சி 22.6.2014

 


வானியல் நாள் - சிறப்பு பேட்டி 28.4.2014
புதுயுகம் தொலைக்காட்சி - இனியவை இன்று

 

Saturn at opposition and Closest approach to earth 10.5.2014
சனி கோள் எதிர் நிலை (சூரியன் பூமி சனி நேர்கோட்டில்)மற்றும் புவி அன்மைநிலை

Saturn at opposition and close10.5.2014, சனி கோள் எதிர் நிலை (சூரியன் பூமி சனி நேர்கோட்டில்)மற்றும் புவி அன்மைநிலை

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை

10.5.2014 அன்று சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் தீர்காம்ஸ அடிப்படையில் வானில் நேர்கோட்டில் வருகிறது இதை சனி “எதிர்நிலை” (Opposition) என்கிறோம்
           
        வருடம் தோறும் வானில் இத்தகைய நிகழ்வு ஏற்படினும் 10.5.2014 அன்று நிகழும் எதிர்நிலை மிகஅரிய ஒன்றாகும்.

        சூரியனை கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றும் பொழுது சூரிய மையத்தில் இருந்து தொலைவு நிலை(aphelion) மற்றும் அன்மை நிலை (perihelion)ஏற்படும். அன்மை நிலையில் கிரகங்கள் தோற்றத்தில் சற்று பெரியதாகவும், ஒளி கூடியும் இருக்கும். தொலைவு நிலையில் சிறியதாக தோன்றும்

        10.5.2014 அன்று பூமிக்கு எதிர்நிலையில் மற்றும் அன்மை நிலையிலும் (8.8997 வானியல் அலகு தொலைவில்) சனி கோள் வருவதால் சனி கோள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக 18".6 கோண அளவில்(angular diameter) தோன்றும், மேலும் சனியின் அழகிய வளையங்கள் 42".3 கோண அளவு விட்டமும்  +21°.7 பாகை சாய்வு (Tilt)நிலையிலும் இருக்கும். சனி வானில் +0.2 தோற்ற ஒளி (apparent magnitude) அலகில் ஒளிரும். புவிமட்ட தோற்ற சாய்வு நிலை (Declination) -15°.3

        எதிர் நிலை என்பது முழுநிலவு(பௌர்னமி -Full Moon) போன்று “முழுசனி” எனகொள்ள வேண்டும்.

        இதனை மாதம் முழுவதும் வெறும் கண்களாலும், தொலைநோக்கி மூலம் தெளிவாகவும் கண்டு ரசிக்கலாம்.

        மீண்டும் இத்தகைய அரிய நிகழ்வை காண 14.8.2022 வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பு: ஒரு வானியல் அலகு(Astronomical Unit, AU) என்பது  149,597,870 கி.மி தொலைவாகும் (பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவின் சராசரி அளவு)

மிக அரியதான குறை கோண சூரிய கிரகணம் 29.4.2014

Non Central Annular Solar Eclipse 29th april 2014 tuesday, குறை சூரிய கிரகணம், கிரைண தோஷம், பரிகாரம், சந்திர கிரகணம்

29.4.2014 செவ்வாய் கிழமை இந்திய நேரப்படி காலை 9:22 மணி முதல் பகல் 1:44 மணி வரை சந்திர கீழ்நோக்கு நிலை(கேது - Descending Node) கிரகணம் சம்பவிக்கும். ஆஸ்திரேலியா மற்றும் தென்துருவப்பகுதியில் மட்டும் தெரியும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.
            தென்துருவப்பகுதியில் நிகழும் “மைய நிழல் விலகல்” சூரிய கிரகணம்  5000 ஆண்டுகளுக்கு 68 முறை மட்டுமே நிகழும்.
            நுனிப்புல் மேய்வது போன்று சந்திரனின் இரண்டாம் நிலை நிஜநிழல் (Antumbra) துருவப்பகுதி வெளியில் (ஆகாயத்தில்) விழும். சந்திரனின் புறநிழல் (Penumbra) தோற்றத்தால் பூமியின் சிலபகுதிகளில் சூரியன் ஒளி வட்டமாகவும், சில பகுதிகளில் பகுதி வெளி வட்டமாகவும் (Partial Annular Solar Eclipse) இந்த கிரகணம் தோன்றும். இது கிரகண வரிசையில் (Saros) 148வது எண்ணாகும்.
            தொலைவு நிலையில் (Apogee) சந்திரன் விட்டம் சிறியதாகவும், சூரியனின் விட்டத்தைவிட குறைந்தும் இருப்பதால் குறைகோண சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

தென்துருவப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய அரசின் அறிவியல் துறைகீழ் இயங்கும் கடல் மற்றும் துருவப்பகுதி ஆய்வுநிலையம் (NCAOR) மைத்ரி மற்றும் பாரதி இந்த கிரகணத்தை கண்காணித்து ஆய்வுச்செய்யும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது http://www.ncaor.gov.in/antarcticas

இந்த பிரபஞ்சத்தில் கிழக்கு என்றும் மேற்கு என்றும் எதுவும் இல்லை. There's no direction in the Universe


இஸ்ரோ & நாஸாவின் அமாவாசை முடிவு நேரமும் பிழையான வாக்கிய பஞ்சாங்க அமாவாசை முடிவு நேரமும்

சந்திரனின் ஓளியும் திதி கணிதமும்

நேரம் எனும் அலகு (வார்த்தை) இந்த பிரபஞ்சம் தோன்றும் வரை இல்லை!

உண்மையான பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, உத்திராயணம்

2014 Eclipse
2014ம் ஆண்டு கிரகணங்கள்

இந்த ஆண்டு இரண்டு முழுசந்திர கிரகணங்கள், ஒரு குறை சூரிய கிரகணம், ஒரு பகுதி சூரிய கிரகணம் என நான்கு கிரகணங்கள் நிகழும்

தமிழகத்தை பொருத்த மட்டில் 8.10.2014 அன்று நிகழும் முழு சந்திரகிரகணம் (Total Lunar Eclipse) மட்டும் சென்னையில் தெரியும். மற்ற மூன்று கிரகணங்கள் தெரியாது

8.10.2014 அன்று பகலில் சூரியன் இருக்கும் பொழுது இந்திய நேரப்படி பகல் 1:42 மணிக்கு புறநிழல் கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில் நிஜநிழல் கிரகணமாக பிரவேஸிக்கிறது, . கிரகணம் உச்சகட்டமாக மாலை 4:25க்கு அடைகிறது.

பகலில் நிகழும் சந்திரகிரகணம் தெரியாது அஸ்மனத்தில் மட்டுமே இது தெரியும். அன்று சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 6:04 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Penumbral) கிரகணம் இரவு 7:05 வரை தெரியும் (சுமார் 1 மணி 11 நிமிடங்கள்)

சூரியமறைவின் பொழுது அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு, ஈரப்பதன் காரணமாக நிஜகிரஹணத்தினை காண்பது அரிதாகும், ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம் (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம்.

2014_Lunar_solar_eclipse_chennai_tambaram மேலும் விபரங்களுக்கு நாஸா இணையதளத்தின் கீழ்கண்ட பக்கங்களை காணவும்

http://eclipse.gsfc.nasa.gov/OH/OH2014.html

. - .
புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013
Penubral Lunar Eclipse 19.10.2013

வீடியோ http://youtu.be/GFfb0nZf1_M

இன்று  அதிகாலை சுமார் 3:18 மணி முதல் பூமியின் புறநிழல் சந்திரன் மீது பட்டதால் நிலவின் ஒளி மங்கத்துவங்கியது  உச்சகட்டமாக காலை 5:20 மணி அளவில் சந்திரன் தனது வழக்கமான பௌர்னமி நிலவின் பொலிவை இழந்து காணப்பட்டது பின்னர் சந்திரனின் ஒளிமங்கல் குறைய துவங்கியது அதேவேளையில் சூரிய உதயத்தால் வானம் பிரகாசமடைய சந்திரனுன் மெல்ல மறையத்துவங்கியது.
இந்த நிகழ்வை தாம்பரம் வானியல் கழகத்தின் பாலு. சரவணன் மற்றும் சண்முகம் நிழற்படமாக பதிவு செய்தார்கள். நிகழ்ச்சியின் இடையே மேல்தட்டு மேகம் கடந்ததால் சில படங்கள் சரிவர அமையவில்லை. ஆயினும் தெரிவு செய்த படங்களை இதனுடன் இணைத்துள்ளோம்.
Photography: Shanmugan Saravanan, Camara: Canon  550 D,
Telescope : Skywatcher MAK90 EQ1

IMG_5186_M

IMG_5145_M

Sun Ring (22°Holo Efect) 8.3.2013 Chennai - Tambaram
சூரிய ஒளிவட்டம்- சென்னை தாம்பரம்

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் பகுதியில் இன்று(8.3.2013) காலை வானத்தில் சூரியனை சுற்றி அழகான ஒளிவட்டம் தெரிந்தது.

        பலவண்ணங்களுடன் கூடிய ஒளிவட்டம் நன்பகல் முன்னதாக மறைய ஆரம்பித்தது

        பூமியின் வளிமண்டல அடுக்கில் இருக்கும் சிறு பணித்துளிகளின் வழியாக சூரியஒளி விலக்கம் (Refraction) ஏற்ப்பட்டு ஒளிவட்டமாக தெரியும்.
       
        இதை அறிவியலில் “22பாகை ஹாலோ” (22° Halo)விளைவு என கூறுவார்கள்.

        இந்த நிகழ்வு இயற்கையான ஒன்று. இதனைக்கண்டு அச்சம் அடைய தேவையில்லை

தாம்பரம் வானவியல் உறுப்பினர் திரு. ரோனி அவர்கள் எடுத்த படம்

Sun_ring_8mar2013-1130 

 

புவியை நோக்கி வரும் விண்கல் 15.2.2013 இரவு

2012DA14 Asteroid விண்கல், சிறுகோள்

15.2.2013 இரவு மற்றும் 16.2.2013 அதிகாலை

புவிக்கு மிக அருகில் பயனித்து புவியின் ஈர்ப்புவிசையால் உட்பட்டு பூமியை தாக்கும் வகையிலான வின்கல், வின்எறிகல், வால்நட்சத்திரம் ஆகியன அன்மை புவி பொருட்கள் (Near-Earth object - NEO) என அழைக்கப்படுகிறது

  • புவி அன்மை எரிகல் Near-Earth meteoroids (சுமார் 50 மீட்டர் விட்டத்திற்கு குறைவானது)
  • புவி அன்மை வின்கல் Near-Earth asteroids (சுமார் 50 மீட்டர் முதல் 32 கி.மி விட்டம் உடையவை)
  • புவி அன்மை வால் நட்சத்திரம் Near-Earth comets (மீநீள்வட்டத்தில் சூரியனை சுற்றும்)

அந்த வகையில் 2012 DA14 வின்கல்லாக (NEA) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

இது 23.2.2012ம் நாள் ஸ்பெயின் உள்ள வான்வெளி கண்காணிப்பு மையம்(OAM Observatory, La Sagra in Spain) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது

தோற்ற அளவு, கால அளவு

சுமார் 45மீட்டருக்கு(150 அடி) மேல் விட்டம் கொண்ட இது பூமியை போன்ற காலஅளவுடன்(366.2நாட்கள்) சூரியனை சுற்றி வருகிறது. இன்றளவும் இதனை தெளிவாக புகைப்படம் எடுக்க இயலவில்லை.

புவிக்கு மிகஅன்மையில் 15.2.2013
                       
            இந்த 2012DA14 என்கிற வின்கல் (Asteroid) பூமிக்கு மிகமிக அருகில் (புவிமையத்தில் இருந்து) 22,0000 கி.மி தொலைவில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில், புவி இணை வட்டம் (Geosynchronous orbit) கீழ் ( பூமியை சுற்றி மணிதனால் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் சுற்றும் பாதைக்கும் கீழ்)  15.2.2013 இரவு 12:56 (16.2.2013 - 00:56) மணி அளவில் மிகஅதிக திசைவேகத்துடன் பயணிக்கிறது.

புவிக்கு ஆபத்து

இந்த வின்கல் பூமியின் மீது மோதும் வாய்ப்பு தற்பொழுது இல்லை. எதிர்காலத்தில் 2026 மற்றும் 2069ல் அருகில் வரும் பொழுதும் மிக குறைவான வாய்ப்பே உள்ளது. ஆயினும் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இது பூமியின் மீது என்றேனும் ஒருநாள் மோதும் வாய்ப்பை மறுக்க இயலாது.

கிரஹணம்

            மேற்படி15.2.2013 அன்று இந்த வின்கல் மீது பூமியின் நிழல் பட்டு 18 நிமிடங்கள் மறைவு (கிரஹணம்) ஏற்படும் (சந்திரகிரஹணம் போன்று).

கண்களுக்கு தோற்றம்

மிகவும் சிறியதாகவும் 22 தோற்றபொலிவு (Absolute visual magnitude)அலகில் உள்ளதால் சாதாரணமாக காண இயலாது மிகவும் சிரமப்பட்டு தொலைநோக்கியில் அல்லது ரேடார் மூலம் மட்டும் காணமுடியும்.
15.2.2013 அன்று பூமிக்கு மிக அருகில் வருவதால் சுமார் 7 அலகு அளவில் தெரியும் எனவே இதை ஓரளவு சாதாரண தொலைநோக்கியில் காண இயலும்
வளிமண்டல ஒளிவிலகல், வளிமண்டல ஈரப்பதம், மேகமூட்டம் காரணமாக காண்பது சிலநேரத்தில் கடினமாக இருக்கும்

கண்காணிப்பு

இந்த விண்கல் புவியை நெருங்குவதை உலகம் முழுவதும் வானவியலாளர்கள் காணவும், கண்காணிக்க வும் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்தியாவிற்கு கிடைத்த பாக்கியம் இதை இரவில் காண இயலும் என்பதுதான்

இந்த அறிய நிகழ்வை காண்பதற்காக எனது தொலைநோக்கியும், என் இரு கண்களும் விண்ணை நோக்கி காத்திருக்கும்.

இந்த மடலை அச்சு எடுக்க அல்லது சேமிக்க(PDF)

Tambaram Astronomy Club
No:9, 4th Street, Kalyan Nagar, Tambaram, Chennai 600 045, India, http://www.prohithar.com +91 9840369677

2012da14 Asteroid 2013 Feb 15, Chennai, Tambaram Astronomy Club, India, வின்கல், சிறுகோள் பூமி அருகில் பயனம்