புறநிழல் சந்திர கிரகணம் - பஞ்சாங்க விளக்கம் 23.3.2016 புதன்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 03:09 மணி அளவில் நிலவானது புவியின் புறநிழல் வட்டப்பகுதிக்குள் நுழைந்து இரவு 7:27 மணி அளவில் வெளியேறுகிறது. இதனால் பவுர்ணமி நிலவின் ஒளி சற்று மங்கலாக தோன்றும். கிரகண முடிந்தவுடன் முழுமதி பொலிவுடன் காட்சியளிக்கும். சென்னையில் சந்திர உதயமாகும் மாலை மணி 6:19 முதல் புறநிழல் கிரகணம் முடிவடையும் காலம் வரை தெரியும். இதை வெறும் கண்களால் காணலாம் இந்த கிரகணம் வானவியலில் கணித சரிபார்த்தலுக்கு மட்டுமே பயன்படும். மற்றபடி இந்து சாஸ்திரப்படி இந்த புறநிழல் கிரகணம் அனுஷ்டானமற்றதாகும் இந்த கிரகணத்தை அடுத்து வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் புறநிழல் கிரகணங்களாக அமைந்துள்ளது. வரும் துன்முகி வருடத்தில் வரும் சூரிய கிரகணங்களும் தமிழகத்தில் தெரியாது எனவே அடுத்து ஒருவருடம் வரை தமிழக புவிநிலையில் இந்து சாஸ்திரப்படி கடைபிடிக்க (அனுஷ்டானிக்க) வேண்டிய கிரகணங்கள் என்று எதுவும் இல்லை. பாலு சரவண சர்மா -
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் கணிதக்ஞர் 15.10.2015 |