![]() |
Kaveri (Cauvery) Pushkaram 12th Sep 2017 குரு கிரகம் ஒரு இராசியில் பிரவேசிக்கும் காலம் முதல் 12 நாட்கள் "புஷ்கரம்" எனும் வைபவம் கடைபிடிக்கபடுகிறது. அதை தொடர்ந்து குரு நின்ற காலம் முழுவதும் "புஷ்கர ஆண்டு" என நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்பணம்செய்து தான தர்மங்ககளை செய்வதாகும் அந்த வகையில் குருகிரகம் துலா இராசியில் 12.9.2017 செவ்வாய் அன்று காலை 6:51 மணிக்கு பிரவேசிக்கிறார் அன்று முதல் 23.9.2017 வரை புஷ்கரம் எனும் நீராடல் வைபவம் காவேரி நதி பாயும் கரைகளில் உள்ள ஊர்களில் கடைபிடிக்கப்படும். மேலும் ஆண்டு முழுவதும் குரு கிரகம் நின்ற துலா லக்னம், குரு கிரகம் நின்ற சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திர தினங்கள், குரு கிரகம் நின்ற ஐப்பசி மாதம் முழுவதும் சிறப்பு நீராடல் ஆண்டு முழுவதும் நடைபெறும். ஜென்ம நட்சத்திரத்தில் காவேரியில் புனித நீராடல் மிகவும் விசேஷமாகும். மொத்தம் 12 நதிகள் இதுபோன்று புனித நதிகளாக போற்றப்படுகிறது, வட இந்தியாவில் மகா கும்ப மேளாவும் இதன் அடிப்படையில் தான் கடைபிடிக்கப்படுகிறது காவேரி புனித நீராடல் முறைகள் 1. தங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்று அதிகாலையில் சூரிய உதயத்தில், மதியம் அல்லது துலா லக்னம் நின்ற காலத்தில் நீராடல் நன்று 3. முன்னோர்கள் நினைவாகவும், சந்ததி பெருகவும், (குரு கிரகம் தான் புத்ர அதிபதி), முற்பிறவி, தற்கால பாபவிமோசனம் வேண்டி தர்பணம், திதி கொடுத்தல் குறிப்பு : எக்காரணம் கொண்டும் குரு கிரகம் வழிபாட்டை "தக்ஷ்ணா மூர்த்தி" க்கு செய்யக்கூடாது இது பெரும் ஆகம பிழை பாவமும் ஆகும். காவேரி துலாஸ்நானம் புஷ்கரம் கண்டிப்பாக திருக்கணித முறையில் தான் கடைபிடிக்கவேண்டும். இதுதான் அறிவியல் பூர்வமானதாகும். இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. இது பாரதம் முழுவதும் ஒரே முறையில்(திருக்கணித) கடைபிடிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும் Cauvery Pushkaralu 2017 Tamil Nadu, Karnataka Ghats புஷ்கரம் குறித்த தகவல்கள் பத்ம புராணம், அக்னி புராணம், பிரம்ம புராணம் நூல்களில் விரிவாக உள்ளது Balu Saravana Sarma. Prohithar, Tambaram Astrologer |
![]() |