குரு பெயர்ச்சி 2011
Guru (Jupiter) Transist 2011
|
எதிர்காலவியல்(Astrological) கணிப்பு என்கிற இந்த கட்டுரையில் சந்திரன் (தங்களின் நட்சத்திரம் உள்ள இராசி) நின்ற ராசியை வைத்து 2011 ஆண்டு குரு கோளின் வான் நிலைகள் புள்ளிவிபரம்(Planets Ephemeris Data) கொண்டு திருக்கணித முறைப்படி நிராயண (Sidereal)அடிப்படையில் கனித்துள்ளேன்.
எதிர்காலவியலில் பலன்கள் வெறும் இராசி சந்திரன்- கோள் நிலை (கோசாரம்)அடிப்படையில் மட்டும் முழுமையாக கனிக்க இயலாது , பிறப்பு இலக்னம் (Ascendant) கோள்நிலை(ஜனன ஜாதகம்), நடப்பு(விம்ஷோத்ரி) தசை – புக்தி- அந்தாரத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து ஒப்புநோக்கி பின்னரே முழுமையாக கனிக்க இயலும். அப்படியே கனித்தாலும் முற்பிறவியின் செயல்கள்(கர்மா), மூதாதையரின் நன்மை தீமைகள்(பாவ புன்யம்) ஆகியனவும் மணித வாழ்வினை நிர்ணயிக்கிறது என்கிறார் அகத்திய மாமுனிவர்.
நன்மைகளை எதிர்கொள்ளும் நாம் தீமைகள் வராமல் தடுக்க இறைவழிபாடு மற்றும் சரியான அறவழி (தான தர்மம்)களை நாடுவதே நன்று.
குரு சஞ்சாரம்: గురు సంచారం - GURU SANCHAARAM
அறிவியல் பார்வை: குரு கிரகம் சூரியனை 360 பாகை சுற்றிவர 11.86 ஆண்டுகள் (4332.71 நாட்கள்) ஆகிறது. இதில் ஒரு ராசியில் (30 பாகை) சுமார் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கும். 63 சந்திரன்களை தன்னகத்தே கொண்ட சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள் இது.
திருக்கணிதப்படி பஞ்சாங்கப்படி: கர சித்திரை 25ஆம் தேதி 8.5.2011 ஞாயிறு மதியம் 2:14 மணி அளவில் குரு மீன இராசியில் இருந்து மேஷ இராசிக்கு செல்கிறார் பின்னர் 17.5.2012 அன்று காலை 9:32 மணி அளவில் ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி: கர சித்திரை 25ஆம் தேதி (8.5.2011) ஞாயிறு நள்ளிரவுக்கு பின்னர் 1:03 (ஆங்கிலப்படி 9.5.2011 திங்கள் அதிகாலை) மேஷ இராசியில் பிரவேசிக்கிறார் பின்னர் மீண்டும் நந்தன வைகாசி 4ஆம் தேதி (17.5.2012) வியாழன் மாலை 6:16 மணி அளவில் ரிஷபத்தில் பிரவேசிக்கிறார்
ஜோதிட பார்வை: குரு பகவான்ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியில் இருந்து 2, 5, 7, 9, 11பார்க்கும் காலத்தில் மிகவும் நற்பலனையும், மாறாக 1, 3, 4, 6, 8, 10, 12 இடங்களில் குரு இருக்கும் காலங்களில் சற்று பின்னடைவும் ஏற்படும்.
குரு வக்கிரம்: ( Apparent Retrogression) குரு இருக்கும் இராசிக்கு 5ல் சூரியன் வரும் பொழுது வக்கிரம் துவங்கி 7ல் வரும் பொழுது அதிவக்கிரமாக மாறும், சூரியன் 9ல் வரும் பொழுது குரு நேர்கதி அடைவார். குரு வக்கிர நிலையில் சுமார் 4 மாதம் இருப்பார், மீன்டும் 9மாத இடைவெளியில் வக்கிர நிலை நிகழும். Each Jupiter retrograde period lasts about 4 months, and happen every 9 months
திருக்கணிதப்படி: 30.8.2011 முதல் 25.12.2011 வரை குரு கிரகம் வக்கிர நிலையில் சஞ்சரிக்கும்.
வாக்கியப்படி: 7.9.2011 முதல் 15.12.2011 வரை குரு கிரகம் வக்கிர நிலையில் சஞ்சரிக்கும்
சனி தான் நின்ற இராசியிலிருந்து 3,7,10 இடங்களை சுபமாக நோக்குவார்
ராகு, கேது தான் நின்ற இராசியிலிருந்து 3,7,11 இடங்களை சுபமாக நோக்குவார்கள்
விரிவாக இன்னும் மலரும்....
Guru Peyarchi - Jupiter Transit - குரு பெயர்ச்சி 2011 - 2012
|