நவரத்தினம் வாங்க சிறந்த நாட்கள்
பொதுவாக திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளே சிறந்தவை
ஜென்ம நட்சத்திரம், தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நல்ல முகூர்த்த நாள்
சுப ஹோரை மிக முக்கியம்
சந்திராஷ்டமம் உடைய தினங்களை அறவே தவிர்க்கவும், தங்களின் சந்திராஷ்டம நட்சத்திரம் இங்கு தரப்பட்டுள்ளது
நவரத்தினம் அனியும் முன்னர்
அன்றைய தினம் காலை ஆதரவற்ற இல்லத்திற்கு தங்களால் இயன்ற உதவி செய்யவும்
நவரத்தினத்தை அதற்குறிய கிரகத்தின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்
தாய், தகப்பனார் கைகளினால் அணிவித்தல் நன்று
நவரத்தினம் அணிய உகந்த நாள்
தங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த நாள்
7, 8 ஆம் இட சுத்தியுட லக்னம்
அஸ்வினி, ரோகினி, மிருகசீருடம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம், ரேவதி ஆகியவை சிறந்த நட்சத்திரங்கள்
வளர்பிறையில் வரும் பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பௌர்னமி திதிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இலக்னம் நன்று
குறிப்பு :
வெறும் நவரத்தினங்கள் மட்டும் நமது வாழ்க்கை பாதையை அமைத்துவிடாது, மாறாக " எதையும் எதிர்கொள்ளும் மணப்பக்குவமும், தன்னம்பிக்கையும் தர்மசிந்தனைகள்தான் உண்மையான இறைவனை தேடலின் வழியாகும்" என்கிற உபநிஷதத்தின் வார்த்தையை இங்கு பதிவுசெய்கிறேன்
ஆன்மீகம் என்பது வெற்றிபெற துடிக்கும் மனிதனுக்கு அளிக்கும் ஒரு நம்பிக்கை ஆயினும் செயல்திட்டம் அற்ற வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியை தருவதில்லை
|