முதலாம் ஆண்டு ஆடித்திருவிழா
28.8.2009 வெள்ளிக்கிழமை முதல்30.8.2009 ஞாயிற்றுக்கிழமை வரை
அழைப்பிதழ்
Invitaion in pdf
|
|
|
About Temple
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களால் 10க்கும் மேற்ப்பட்ட மிக அழகிய தாமரைக்குளங்களால் நிர்மாணிக்கப்பட்ட பழமையயான ஊர் தாம்பரம் ஆகும். இப்பொழுதுள்ள தாம்பரம் பல வளர்ச்சிகளை கண்டு மாறுபட்டிருந்தாலும், பூர்விகமான பழைய தாம்பரம் இன்னும் தனது பாரம்பரிய கலாசாரத்துடன் விளங்கிக்கொண்டுவருகிறது, மேலும் இங்குள்ள மக்கள் தங்களின் பழைய மரபுகளையும் கட்டிகாத்து வருகிறார்கள்.
1990 வரை பயிர் இட்டு வளர்ச்சிகண்ட கிராமம். சென்னை நகரின் விரிவு - நகரமயமாக்கலால் ஆகியவைகளால் பயிர்தொழில் நின்றுவிட்டது. அன்மையில் பழையதாம்பரத்தின் குளம் பலநல்ல உள்ளங்களின் முயற்ச்சியினால் தூய்மை படுத்தப்பட்டு தற்பொழுது இம்மக்களின் நீர் ஆதாரமாகவும், நடைபயற்சி பகுதியாகவும் உள்ளது
குளத்தின் மேற்கு கரையில் பலநூற்றண்டுகள் பழமையான சிவன்கோவில் புதுப்பிக்கப்பட்டு சிவன் -விஷ்ணு கோவிலாக விளங்குகிறது
இத்திருத்தலத்தில் முறையாக வழிபாடுகள் நடைபெறுகிறது, குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி , பிரதோஷ வழிபாடு ஆகியன மிகவும் பிரசித்திப்பெற்றது.
இப்படிப்பட்ட பாரம்பரிய தாம்பரத்தின் காவல் தெய்வமாகவும், மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகின்ற அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் பழைய தாம்பரம் குளக்கரையில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது
பழமையான இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் இருந்து தான் , தாம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களுக்கும் ஆடி மாத்தில் கரகம் அலங்கரித்து புறப்படும், பல ஆயிரம் மக்கள் கூடும் இந்த கோவிலின் கட்டுமானம் வலுவிழந்ததால் புதுப்பிக்கப்பட்டு, வருகைதரும் பக்தர்களுக்கு அதிக வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு தற்பொழுது கோவில் புணர்நிர்மாணப்பணிகள் நடைபெறுகிறது
கைதேர்ந்த விஸ்வகர்மாவினரால் மிக அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கோவிலாக கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
8 மார்ச் 2009 அன்று திருக்குடமுழக்கு நடைபெற்றது
இப்புணிதமான பணியில் தாங்களும் பங்கேற்று இறையருள் பெறவேண்டும்
கோவிலின் வரைபட தோற்றம் - பக்கவாட்டு தோற்றம்
கோவிலின் வரைபட தோற்றம் - முன்பக்க தோற்றம்
|