அமாவாசை என்று ? When New moon 2014

ஆனி மாதத்தில் அமாவாசை 26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி என இரு தினங்களில் திதி பரவியுள்ளது.

திதி என்று பகல் பொழுதில் 5ல் 4ம் பாகத்தில்(அபரான்னம்) அதிகமாக உள்ளதோ அன்றுதான் திதி கடைபிடிக்க வேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்(மூதாதையர்) நாம் தரும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும் என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.
________________________________________
அமாவாசை கணிதம்: (மணி - நிமிடம் - விநாடி அடிப்படையில் தரப்பட்டுள்ளது)

அமாவாசை துவக்கம் : 26.6.2014 வியாழன் பகல் 12:07
அமாவாசை முடிவு: 27.6.2014 வெள்ளி பகல் 13:38
சூரிய உதயம் 5:48 அஸ்தமனம் 18:34 அகஸ் 12:46 மணி (31நா 55 விநா)
26.6.2014 வியாழன் மற்றும் 27.6.2014 வெள்ளி இருதினங்களிலும் பகல் பொழுது அகஸ் 12:46 மணி
ஐந்தில் ஒரு பாகம் = (12:46 / 5) = 2:33:12
அபரான்னம் துவக்கம் = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3) = 5:48 + (2:33:12 X 3) = பிற்பகல் 13:28
அபரான்ன மத்திமம் = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 3.5) = 5:48 + (2:33:12 X 3.5) = பிற் பகல் 14:44
அபரான்ன முடிவு = சூரிய உதயம் + (ஒரு பாகம் X 4) = 5:48 + (2:33:12 X 4) = மாலை 16:01
குதப காலம்(பகல் பொழுதில் 15ல் 8ம்பங்கு) : துவக்கம் பகல் 11:45 குதப காலம் முடிவு பகல் 12:36

முடிவு: அபரான்ன காலத்தில் முழுமையாக வியாபித்திருக்கும் 26.6.2014 வியாழன் அன்றே திருக்கணிதப்படி மற்றும் வாக்கியப்படி அமாவாசை திதி கடைபிடிக்க வேண்டும்.மேலும் அன்று குதப காலத்திலும் அமாவாசை தொடர்புடையது மிகவும் விசேஷமானதாகும்.
www.thanigaipanchangam.com

aasi amavasai

home page > www.prohithar.com 4.7.2014