Balu saravana sharma - www.prohithar.com
No 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 600 045, INDIA
Telefax : +91 44 2226 1742, Cell : +91 98403 69677, Email : prohithar@gmail.com
 

காந்திஜி அவர்கள் குரல் (Mp3) 5min 19 sec

கதர் துணியும் கிராமிய பொருளாதாரமும்

கருத்தாக்கம் : பாலு. சரவண சர்மா

  கதர் துணி வாங்குவதால் ஏற்படும் நன்மைகளை அறிவியல் மற்றும் பொருளியல் சிந்தனையோடு நோக்கும் பொழுது ஏற்படும் நன்மைகள் பல, அவற்றில் சிலவற்றை இங்கு பதிக்கின்றேன

பருத்தி விவசாயி படும்பாடு

இன்றைய நாட்களில் இந்திய விவசாயி இயற்கை சீற்றங்கள் மற்றும் அரசின் கொள்கைகளாலும் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக தமிழக விவசாயிகள் மாநிலங்களிடையே உள்ள நதிநீர் பங்கீடு உடன்பாடு சரிவர நடைமுறைப்படுத்தாததினால் பாசனநீர் சரிவர கிடைக்கவில்லை.

கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் பருத்தி அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் பருவகால மழையினை நம்பி பயிர் வைக்கப்படுகிறது. நீர்தேக்கங்கள் சிறிய அளவில் தான் உதவிடுகிறது. மழை சரிவரபெய்யவில்லை எனில் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகிறார்கள், வங்கி மற்றும் கந்து வட்டி காரர்களிடம் கடனாளியாகிவிடுகிறார்கள். அடுத்த முறைக்கு சீர்அடையும் என்ற நம்பிக்கையில் துயரத்தினை சந்திக்கிறார்கள்.

அரிசி பயிறுடுபவர்கள் ஒருகுறிப்பிட்ட அளவை தங்களின் தேவைக்கு எடுத்துக்கொள்வார்கள், ஓரளவு உண்டு உயிர்வாழமுடியும். ஆனால் பருத்தி பயிர் வைத்தால் அந்த நிலத்தில் உணவு பயிர்களை பயிரிடமுடியாது. எனவே அவர்கள் உயிர்வாழ அரிசியை காசுகொடுத்து தான் வாங்கவேண்டும். ஏற்கனவே கடனாளியாக உள்ள அவர்கள் உயிர்வாழ மிகவும் போராடுகிறார்கள்

விவசாயிகள் வறட்சிகாலத்தில் பாதிக்கப்படுவது தற்பொழுது வழக்கமாகிவிட்டது, இதனால் விவசாய கூலித்தொழிலாளர்கள் உயிர்வாழ வேறு வேலைகளுக்கு செல்வதும் அதிகமாகிவிட்டது. இத்தகைய காரணத்தினால் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் கட்டுபடியாகத அளவில் தினக்கூலி எறிவிட்டது. பருத்தி விவசாயத்தில் இயந்திரம் பயண்படுத்த முடியாது!

காந்தி ராட்டைவிவசாயிகளின் துயரத்திற்கு உலகமயமாக்கல், தரமற்ற பயிர் விதை வநியோகம், இடுபொருள் விலைஏற்றம் மற்றும் அரசின் ஆதரவற்ற சூழல் ஆகியவைகளும் முக்கிய காரணிகளாகும்

அதிக வட்டிக்கு கடன்வாங்கி கஷ்டப்பட்டு பயிர்வைத்தாலும் வரவு, செலவுக்கே சென்று விடுவதால் இலாபம் இல்லை

ஜி8 வளர்ந்த பணக்கார நாடுகள் ஆயுதங்களை வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு கொள்ளை இலாபத்தில் விற்று அதில் ஒரு பகுதியை தங்கள் நாட்டின் விவாசயிகளுக்கு மானியமாக அளிக்கிறார்கள்(சில பகுதிகளில் 100% மானியம் தரப்படுகிறது). இதனால் உற்பத்தி விலையை செயற்கையாக, போலியாக குறைத்து உலகசந்தைகளில் விற்கப்படுவதால், நம்போன்ற வளரும் நாட்டில் உள்ள விவசாயிகள் உற்பத்தி விலையைவிட குறைவாக நஷ்டத்தில் கொள்முதல் செய்கிறார்கள்.

மொத்தத்தில் நமது மானம் காக்கும் ஆடையின் முக்கிய பொருளான பருத்தியை பயிர் செய்யும் விவசாயிகளின் உயிர் போக்கும் நிலைதான் இன்று நிலவுகிறது.

Top

நெசவாளியின் இன்னல்

தமிழக பாரம்பரிய தொழிலில் விவசாயத்திற்கு அடுத்த இடம் பிடிப்பது நெசவுத்தொழில்தான், 90%விழுக்காடு நெசவாளர்கள் வறுமையில் உயிர்வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இயந்திரமயமாக்கலால் , பாரம்பரியமாக செய்து வரும் தொழில் அதிகமளவு பாதிக்கப்பட்டு சிலவேளைகளில் கஞ்சி தொட்டி(வறுமையின் சின்னம்) வைக்கப்பட்டு நெசவாளர் குடும்பங்கள் உயிர்வாழ காப்பாற்றுமளவு சென்றுவிடுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

கைத்தறி நெசவாளியின் குடும்பமே ஒன்றுபட்டு உழைத்தாலுமகூட ஒருநாளைக்கு ரூபாய் 100க்கு மேல் சம்பாதிக்க முடியாது என்பதுதான் இன்றைய நெசவாளியின் கண்னீர்விடும் சூழல்

நெசவுத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடும் தொழிலாளிகள்70% பஞ்சு தூசியினால் நுரையீரல் பாதிக்கப்பட்டும், கை மற்றும் கால்கள் வீங்கியும் அவதிப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

உலக மக்களின் மானம் காக்க வறுமையும் நோயும் ஏற்று தங்கள் இன்னுயிரை தருகிறார்கள். இவர்களுக்கு மாற்று தொழில் செல்ல முடியாதளவு வேறு வேலைகள் தெரியாது, மேலும் கிராமப்புறத்தில் பெரியளவில் தொழிற்சாலைகளும் இல்லை. இத்தகைய மிகப்பெரிய மாற்றம் உடனே நடைபெறவும் முடியாது.

விடியல்

இப்படிப்பட்ட சூழலில் பருத்தி விவசாயி மற்றும் நெசவாளிகளுக்கு வாழ்வாதாரம் மேம்பட என்ன செய்யவேண்டும் என்பதே பெரிய கேள்வியாகும்.

அவர்களின் வாழ்வில் வசதியை ஏற்படுத்தவில்லை என்றாலும் குறைந்தபட்சம் வறுமையை போக்க செலவில்லாத வழிகளை இங்கே பார்ப்போம்

 • அரசுபணியாளர்கள் கட்டாயமாக வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடை உடுத்தவேண்டும்
 • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடை உடுத்தவேண்டும்
 • மக்கள் திருவிழா காலங்களில் மற்றும் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பொழுது கைத்தறி உடுத்த வேண்டும்
 • அன்பளிப்பாக, பரிசாக கைத்தறி ஆடைகளையைத்தரவேண்டும்
 • பக்தர்கள் இறைவனுகு கைத்தறி அல்லது பட்டு துணிகளையே சாற்றவேண்டும்
 • இந்தியாவில் விற்க்கப்படும் பண்ணாட்டு ஆயத்த ஆடைகளுக்கு இயற்கைவரி என்று விதித்து அதை விவசாயி மற்றும் நெசவாளிக்கு சிறப்பு கூடுதல் மானியமாக தரவேண்டும்

இவை அரசாணை மூலமாகவும் ஊடக வழி விழிப்புணர்ச்சி பிரசாரங்கள் மூலமாகவும் செய்வதால் பருத்தி விவசாயி மற்றும் நெசவாளிகளின் வாழ்வில் ஒளியேற்றலாம் என்பதே எனது வேண்டுகோள்.

பருத்தி-பாலிஸ்டர் ஒப்பீடு

பருத்தியின் சிறப்புகள்

 • இந்திய பருவசூழலுக்கு மிகவும் உகந்தது
  ஈரத்தை உறிச்சி உடலை சுகாதாரமாக வைக்கும்
 • தீ விபத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்காது
 • குப்பையானாலும் எளிதில் மக்கும்-உரமாகும்
 • எளிதில் நைந்து சாக்கடை கால்வாய்களில் அடைக்காது
 • இந்திய ஏழை விவசாயியும், ஏழை நெசவாளியும் பயண் அடைவார்கள்
 • கிராமிய பொருளியல் மேம்படும் இதனால் நகரத்திற்கு இடம் பெயர்வு குறையும்
 • இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது
 • உற்பத்தியினால் உலக வெப்பமயமாகல் இல்லை
 • முழுவதும் மனித சக்தி பயண்படுகிறது
 • துணிகிழிந்தாலும் வேறு தேவைக்கு(மிதியடி) பயண்படும்
 • பழைய பருத்தி துணிக்கு சந்தை தேவை அதிகம

பாலிஸ்டரின் கேடுகள்

 • இந்திய பருவசூழலுக்கு ஏற்றதல்ல
 • ஈரத்தை உறிச்சிடாது அதனால் உடலிற்கு தீங்கு
 • தீ விபத்தில் உடலுக்கு பெரும் தீங்கு விளைவித்து உயிரையும் பறிக்கும்
 • குப்பையானால் 1 மில்லியன் ஆண்டுகள் வரை மக்காது
 • சாக்கடை கால்வாய்களில் அடைத்து வடிகால் வழியை தடுத்து வெள்ளப்பெருக்கு மற்றும் மண்ணில் நீர் ஊறுவதை தடுப்பதால், நீர் ஆதாரம் குறையும்
 • மூலப்பொருள் பன்னாட்டிலிருந்து வருவதால் அன்னிய செலாவனி கையிருப்பு குறையும், அமெரிக்க "டூபான்ட" கம்பெனி மட்டும் பிழைக்கும்
 • மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படும் பொழுது வெப்பம் வெளியிடப்படுகிறது
 • பூமியின் இயற்கை வளம் (பெட்ரோல்) அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் சுரண்டப்படுகிறது
 • உற்பத்தியினால் உலக வெப்பமயமாகல் அதிகம்
 • பாலியஸ்டர் நூல் செய்ய இயந்திரம் பெருமளவு பயண்படுகிறது
 • துணிகிழிந்தால் வேறு தேவைக்கு பயன்படாது
 • பழைய பாலியஸ்டர் துணிக்கு சந்தை தேவை மிகமிக குறைவு

கதர் ஆடைகளை வாங்கி ஏழை விவசாயி, நெசவாளின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்

இயற்கை வழி பருத்தியை பயன்படுத்துவோம்!
புவி வெப்பமயலை தடுப்போம்

காந்திஜி அவர்கள் குரல் (Mp3) 5min 19 sec